scorecardresearch

ரவுடிகளிடம் மாட்டிக்கொண்ட வெண்பா… காப்பாற்றியது யார் தெரியுமா?

Tamil Serial Update : ஒட்டுமொத்த சீரியலிலும் வரவேற்பை பெறுவது யார் என்றால் ஒரே ஒரு நபர்தான். அதுதைான் நம்ம வில்லி வெண்பாவின் அம்மா.

Tamil Serial Bharathi Kannamma Rating Update : சூப்பர் மேடம் வெண்பாவுக்கு சரியான ஆள் நீங்கதான என்று சொல்ல வைத்தாலும், மறுபக்கம் ஒன்னு சேத்து வைங்க இல்ல பிரிச்சு வைங்க எதுக்கு இப்படி இழுவையா இழுத்து கொல்றீங்க டைரக்டர் சார் என்று கேட்க தோன்றுகிறது பாரதி கண்ணம்மா சீரியல்.

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. தொடக்கத்தில் வரவேற்பை பெறவில்லை என்றாலும், கண்ணம்மா வீட்டை விட்டு வெளியேறும் காட்சியில் இருந்து கண்ண்மாமாவாக நடித்த ரோஷினி சீரியலில் இருந்து வெளியேறுவது வரை பரபரப்பாக சென்றுகொண்டிருந்தது

இடையில் யார் கண் பட்டதோ தெரியவில்லை. இப்படி பாரதி கண்ணம்மாவை டம்மி ஆக்கிவிட்டார் இயக்குநர். இப்போதைக்கு இந்த ஒட்டுமொத்த சீரியலிலும் வரவேற்பை பெறுவது யார் என்றால் ஒரே ஒரு நபர்தான். அதுதைான் நம்ம வில்லி வெண்பாவின் அம்மா. வெண்பா இதற்கு முன்பு எப்படியெல்லாம் வில்லத்தனம் செய்தாரே அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காட்சிகள் நகர்ந்துகொண்டிருக்கிறது.

ஆனால் கதையில் மெயின் கேரக்டரானா பாரதியும் கண்ணம்மாவும் சீரியலில் இருக்கிறார்களா என்ற டவுட் வரத்தான் செய்கிறது. இந்த சீரியலில் 8 வருடங்களுக்கு பிறகு என்று தொடங்கிய எபிசோட்டில் இருந்து தற்போதுவரை பாரதியும் கண்ண்ம்மாவும் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள். இதில் கண்ணம்மா அவ்வப்போது என்னை நம்புங்க நான் தப்பு பண்ணல என்று சொல்லி இருப்பார்.

ஆனால் பாரதி அவருக்கு கல்யாணம் ஆனது ஞாபகம் இருக்கா இல்லையா என்பதே தெரியவில்லை கோர்ட் உத்தரவு படி ரெண்டுபோரும் ஒரே வீட்டில் இருந்தார்கள். அதற்கு முன்பு எப்பாவாது ஒருநாள் பாரதி கண்ணம்மா வீட்டில் தங்கியிருந்தார். ஆனால் இதுநாள் வரை கண்ணம்மா இப்படி நமக்கு துரோகம் செய்திருப்பாளா இதில் எதாவது தவறு நடந்திருக்குமா என்று யோசித்த மாதிரியே தெரியவில்லை.

அவ்வளவு ஏன் சமீபத்தில் ஒரு தேவையில்லாத ஒரு காட்சியை வைத்தார்களே இதயமாற்று அறுவை சிகிச்சை இதில் சென்னையில் ஒருநாள் சரத்குமார் போன்று ஆல்ட்ர்னெட்க்கு பல ஐடியாக்களை புகுத்தி கண்ணம்மா நல்லபடியா முடிச்சு கொடுத்தாரே இதெல்லாம் எதுக்குனே தெரியலயே. இப்படி அறிவாளியா யோசிச்சி கண்ணம்மா செயல்ட்டாரே இதை பார்த்து அவள் நல்லவள் என்பது பாரதிக்கு புரிந்துவிட்டதா, இப்போவும் அவளை பிடிக்காதது போல் தானே நடந்துகொண்டிருக்கிறார்.

இன்னும் சொல்லப்போனா இப்போ ஹேமா பரிசு வாங்குற நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் கண்ணம்மாவை பாரதி பக்கத்தில் உட்கார வைக்க சௌந்தர்யா ப்ளான் செய்கிறார். அவங்க ரெண்டுபேரும் பிரிந்ததில் இருந்து நீங்கள் இதைததான் செய்கிறீர்கள் ஆனால் இவர்கள் சேர்ந்த பாடில்லை. இயக்குநர் அவர்களை சேரவும் விடவில்லை.

இதுக்கு நீங்க பேசாமா கதைக்கே வந்திருக்கலாமே கண்ணம்மா இவ்வளவு நல்லவள் என்று ஆடியன்ஸ்க்கு எப்போவோ தெரியும் டைரக்டர் சார் அதை ஏன் திரும்ப திரும்ப சொல்லி டைம் வேஸ்ட் பண்றீங்க என்று கேட்க தோன்றுகிறது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில், வெண்பா ரவுடிகளிடம் மாட்டிக்கொண்டு ஹெல்ப் என்று கத்த திடீரென ஒருவர் வந்து ரவுடிகளை அடித்து துவம்சம் செய்கிறார். அதில் இம்ரஸ் ஆகும் வெண்பா நீங்க எங்க வீட்டுக்கு லஞ்ட்க்கு வாங்க என்று சொல்லி கார்டை கொடுத்துவிட்டு செல்கிறாள்.

அடுத்து வீட்டுக்கு வரும் அவரை இவர்தான் என்னை காப்பாற்றியது என்று வெண்பா சொல்ல, இவர் தான் ரோகித் நான் உனக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை என்று சொல்கிறாள். இதனால் வெண்பா அதிர்ச்சியாக ப்ரமோ முடிவடைகிறது. போற போக்கை பார்த்தால் இந்த சீரியரலில் வெண்பாவும் அவரது அம்மாவும் தான் முக்கிய கேரக்டர், பாரதி கண்ணம்மா இருவரும் கெஸ்ரோல் மாதிரி ஆகிவிடும் போல என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்

இதனிடையே வெண்பாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் தொடங்கியாச்சு. அப்புறம் என்ன உண்மையை சீக்கிரம் பாரதிக்கு தெரியப்படுத்துங்க. பாரதிக்கு உண்மை தெரிஞ்சதுக்கு அப்புறம் சீரியல் எப்படி கொண்டுபோகனும்னு தெரியலனா முடிச்சிவிடுங்க. அதுக்காக இப்படி இழுவையாக இழுக்காதீர்கள்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial bharathi kannamma rating update with promo in tamil