scorecardresearch

வெண்பாவுக்கு ஷாக் கொடுத்த பாரதி… ஆனா அவர் குடும்பம் குஷியோ குஷி

Tamil Serial Update : பாரதியை கல்யாணம் பண்ணிக்க எவ்வளவே சதித்திட்டம் தீட்டிய வெண்பா கடைசியில் அம்மாவின் பேச்சை மீற முடியாமல் ரோகித்துடன் நிச்சயதார்த்தத்திற்கு தயாராகிறாள்

வெண்பாவுக்கு ஷாக் கொடுத்த பாரதி… ஆனா அவர் குடும்பம் குஷியோ குஷி

Tamil Serial Bharathi Kannamma Episode Update In tamil : விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தொடக்கத்தில் வரவேற்பு இல்லை என்றாலும், கண்ணம்மா வீட்டை விட்டு வெளியேறி நடைபயணம் சென்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதன்பிறகு சில அதிரடி திருப்பங்களுடன் அரங்கேறிய இந்த சீரியல் சமீப காலமாக ட்ராக் மாறி எதை நோக்கி செல்கிறது என்று யூகிக்க முடியாத அளவுக்கு சென்றுகொண்டிருந்தது.

ஆனால் தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் கதையின் நேர்கோட்டுக்கு வந்துள்ளளது. பாரதியை கல்யாணம் பண்ணிக்க எவ்வளவே சதித்திட்டம் தீட்டிய வெண்பா கடைசியில் அம்மாவின் பேச்சை மீற முடியாமல் ரோகித்துடன் நிச்சயதார்த்தத்திற்கு தயாராகிறாள். ஆனாலும் அவர் மனதில் பாரதி தொடர்பான நினைவுகளும், அவனை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசையும் நீங்கவில்லை.

இதனிடையே நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு பாரதி குடும்பம் கண்ணம்மா உள்ளிட்ட அனைவரையும் அழைத்திருந்தார் வெண்பாவின் அம்மா. அவர்களிடம் ரோகித்தை அறிமுகம் செய்து வைப்பதற்காக இப்படி செய்திருந்தார். நிகழ்ச்சியில் பேசும் வெண்பா இந்த நிச்சயதார்த்தத்தில் என்ககு சம்மதம் இல்லை நான் பாரதியை தான் லவ் பண்றேன் என்று சொல்லிவிடுகிறாள். இதை கேட்டு பாரதியின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைகின்றனர்.  

ரோகித் மற்றும், தனது அம்மாவை அசிக்கப்படுத்த வெண்பா மேற்கொண்ட இநத முயற்சி கடைசியில் அவளுக்கே வினையாக முடிந்துவிடுகிறது. வெண்பா அவ்வாறு சொன்னதும், ரோகித் பாரதியிடம் வெண்பா சொன்னதை பற்றி கேட்க, அப்போது பேசும் பாரதி, வெண்பாவை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று எப்போதும் நினைத்தில்லை. அவள் எனக்கு தோழி மட்டும்தான் என்று சொல்லி வெண்பாவை நோஸ்கட் செய்துவிடுகிறான்.

மேலும் வெண்பாவை திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இதுவரை வந்ததில்லை இனிமேல் வரவும் வரதாது என்று சொல்லும்போது சௌந்தர்யாவின் மற்றும் கண்ணம்மா என அனைவரும் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். பாரதியின் பேச்சை கேட்டு அதிர்ச்சியடையும் வெண்பா என்ன செய்வது என்று தெரியாமல் நிற்க, அதற்குள் அவளின் அம்மா அதான் பாரதியே சொல்லிட்டாரே அப்புறம் என்ன? ரோகித் தான் இனி மாப்பிள்ளை என்று சொல்லிவிடுகிறார்.

நான் அடுத்த வாரம் அமெரிக்க போகிறேன். திரும்ப வருவதற்குள் இருவரும் மனம்விட்டு பேசி கல்யாண தேதியை குறித்து வையுங்கள் என்று சொல்லிவிடுகிறார். இதனால் வெண்பா மேலும் அதிர்ச்சியாக அத்துடன் முடிகிறது எபிசோடு

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial bharathi kannamma rating update with promo in tamil