சமீபத்தில் தொடங்கப்பட்ட பாரதிகண்ணம்மா 2 சீரியல் கடந்த வாரம் முடிவுக்கு வந்த நிலையில், இந்த சீரியலின் வெற்றி விழா தற்போது நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சி நாளை ஒளிபரப்பாக உள்ளது.
Advertisment
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் இல்லத்தரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற ஒரு சீரியலாக இருந்தது. அருண் பிரசாத், விணுஷா தேவி, ஃபரீனா ஆசாத், ரூபாஸ்ரீ உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த சீரியல் மலையாளத்தில் வெளியான கருத்த முத்து என்ற சீரியலின் ரீமேக்காக திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது.
இந்த சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்த நிலையில், அடுத்த சில நாட்களில் பாரதி கண்ணம்மா சீசன் 2 என்ற சீரியல் தொடங்கப்பட்டது. இதில் கண்ணம்மாவாக விணுஷா தேவியும், பாரதியின் அம்மாவாக ரூபாஸ்ரீயும் நடித்து வநத நிலையில், பாரதி கேரக்டருக்கு அருண் பிரசாத் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சுப்பு சூரியன் நடித்து வந்தார்.
முதல் சீசன் 1000 எபிசோடுகளை கடந்து டிஆர்பி ரேட்டிங்கில் முக்கிய இடம் பெற்றிருந்த நிலையில், 2-வது சீசனக்கு ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் டிஆர்பி ரேட்டிங்கில் வீழ்ச்சியை சந்தித்த பாரதி கண்ணம்மா 2, கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து 3 மணிநேரம் ஒளிபரப்பு செய்யப்பட்டு பாரதி கண்ணம்மா சீசன் 2 முடிவுக்கு வந்தது.
Advertisment
Advertisements
இந்நிலையில் இந்தத் தொடரின் வெற்றி விழா கொண்டாட்டத்தை விஜய் டிவி வரும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பவுள்ளது. இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில், பாரதி கண்ணம்மா தொடரில் நடித்தவர்கள் அனைவரும் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியில் நடிகை வினுஷா தேவியின் குடும்பத்தினரும் மேடையில் ஏறி அவர்குறித்த பாராட்டுக்களை பகிர்ந்துக் கொண்டனர்.
மேலும் தங்களை மிகவும் சிறப்பாக அவர் பார்த்துக் கொள்வதாக அவரது அம்மா கூறியதை தொடர்ந்து மகிழ்ச்சியடைந்த வினுஷா, தன்னுடைய அம்மா ரியல் லைஃப் கண்ணம்மா என்று கூறியுள்ளார். இந்த வெற்றிவிழா வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil