Advertisment

இறுதி கட்டத்தில் பாரதி கண்ணம்மா சீசன் 2 : டி.ஆர்.பி ரேட்டிங்கில் சரிவு தான் காரணமா?

கண்ணம்மாவாக வினுஷா தேவியே தொடர்ந்து நடித்து வரும் நிலையில், பாரதியாக ரோஜா சீரியல் நாயகன் சுப்பு சூரியன் நடித்து வருகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bharathi Kannamma

Bharathi Kannamma Season 2 End

சமீபத்தில் தொடங்கப்பட்ட விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீசன் 2 சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சீரியலின் இறுதிக்கட்ட ப்ரமோ தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.

Advertisment

சின்னத்திரையில் விஜய் டிவி சீரியலுக்கு என்று ரசிகர்கள் மத்தியில் தனி இடம் உண்டு. இதில் கடந்த சில வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மலையாளத்தில் வெளியான கருத்த முத்து என்ற சீரியலின் ரீமேக்காக தொடங்கப்பட்ட இந்த சீரியலில் விணுஷா தேசி, அருண் பிரசாத், ரூபா ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

தேவையில்லாமல் மனைவி மீது சந்தேகப்பட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை தெளிவாக எடுத்து கூறிய இந்த சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்த நிலையில், அடுத்த வாரத்தில் இருந்து பாரதி கண்ணம்மா சீசன் 2 தொடங்கப்பட்டது. இதில் கண்ணம்மாவாக வினுஷா தேவியே தொடர்ந்து நடித்து வரும் நிலையில், பாரதியாக ரோஜா சீரியல் நாயகன் சுப்பு சூரியன் நடித்து வருகிறார். ரூபாஸ்ரீ பாரதியின் அம்மாவாக நடித்து வருகிறார்.

இதனிடையே பாரதி கண்ணம்மா முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பு 2-வது சீசனுக்கு கிடைக்காத நிலையில், டிஆர்பி ரேட்டிங்கில் சறுக்களை சந்தித்தால், பாரதி கண்ணம்மா 2 விரைவில் முடிவுக்கு வர உள்ளது. தற்போது இந்த சீரியலின் இறுதி எபிசோடுகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில், வரும் ஞாயிறு அன்று (ஆகஸ்ட் 6) தொடர்ந்து 3 மணி நேரம் ஒளிபரப்புடன் பாரதி கண்ணம்மா சீசன் 2 முடிவுக்கு வர உள்ளது. இறுதி அத்தியாத்தின் ப்ரமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bharathi Kannamma Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment