Advertisment

பாரதி கண்ணம்மா செட்டில் தூங்கி வழியும் இந்த நடிகை புதுசா? ரசிகர்கள் கண்டுபிடிச்சுட்டாங்க!

Serial Viral Video Update : பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வரும் நடிகை ஒருவர் படப்பிடிப்பு தளத்தில் தூங்கி விழும் காட்சி வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
பாரதி கண்ணம்மா செட்டில் தூங்கி வழியும் இந்த நடிகை புதுசா? ரசிகர்கள் கண்டுபிடிச்சுட்டாங்க!

Bharathi Kannamma Serial Shooting Spot Viral Video : மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கிய பங்காற்றி வருவது சீரியல், கொரோனா காலத்தில் வீட்டில் இருந்த பலரும் சீரியலுக்கு அடிமையாகி, அந்த சீரியல் குறித்து தேடல்களுக்கவே நேரத்தை செலவழித்து வருகின்றனர். இதில் சீரியல் மட்டும்ல்லாது அந்த சீரியலில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.

Advertisment

அதற்கு ஏற்றார்போல் சீரியல் நட்சத்திரங்களும், தங்கள் குறித்த புகைப்படம் வீடியோ மற்றும் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்களை தங்களது  வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவியின் ஹிட் சீரியலான பாரதி கண்ணம்மா சீரியலின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ வலைதளத்தில் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது.

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்துள்ள இந்த சீரியல், இல்லத்தரசிகளின் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக உள்ள நிலையில், கடந்த சில வாரங்களாக இந்த சீரியலில் அதிரடியாக பல திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. பாரதி-கண்ணம்மா சந்திப்பு, அவர்கள் எடுத்துக்கொண்ட செல்பி, ஹேமாவிடம் கண்ணம்மா பற்றி பாரதி கூறுவது என அழகிய தருணங்கள் இடம்பெறுகின்றன.

பெண்கள் மத்தியில் பெரும வரவேற்பை பெற்றுள்ள இந்த சீரியலின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில், இந்த சீரியலில் அஞ்சலியாக நடித்து வரும் கண்மணி மனோகரன், படப்பிடிப்புக்கு இடையே அமர்ந்துகொண்டே தூங்கி விழும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோவில் அவருடன் இருக்கும் ஒருவர் சீரியலில் புது எண்ட்ரியாக வர உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோ வரைலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் இந்த வீடியோவுக்கு பலவகையான கமெண்ட்களை கொடுத்து வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bharathi Kannamma Serial Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment