Bharathi Kannamma Today Episode Update : வளைகாப்பு நிகழ்ச்சிக்காக அஞ்சலி வீட்டிற்கு வரும் அகில் அம்மா கொடுத்துவிட்ட நகைகளை அஞ்சலியிடம் கொடுக்கிறான். இதை பார்த்து ஷாக் ஆகும் அஞ்சலி போட்டோஷூட்காக வாடகை நகையா என்று கேட்க, அம்மா வாங்கி கொடுத்து என்று அகில் உண்மையை சொல்கிறான். அப்போது அங்கே வரும் அஞ்சலியின் அம்மாவும் வாடகை நகையாக என்று கேட்க அவளுக்கும் அகில் புரிய வைக்கிறான்.
இதற்கிடையே வெளியில் காரில் வெயிட் பண்ணும் பாரதிக்கு வெண்பா போட்டோ அனுப்பி வைக்கிறாள். இதை பார்த்து கடுப்பாடும் பாரதி இந்த போட்டோக்கு கமெண்ட் கொடுக்கலனா போன் பண்ணி தொல்லை பண்ணுவா என்று சொல்லி வொண்டர்புல் வெண்பா என்று அனுப்புகிறான். இதை பார்த்து வெண்பா மகிழ்ச்சியில் இதற்கே இப்படி சொல்றான் நேரில் பார்த்தால் என்ன சொல்வானே என்று மகிழ்ச்சியாக வருகிறாள்.
தொடர்ந்து வளைகாப்பு நிகழ்ச்சிக்கா சௌந்தர்யா அவரது கணவர் மற்றும் ஹேமா மூவரும் அஞ்சலி வீட்டிற்கு வருகின்றனர். அப்போது பாரதியை பார்க்கும் சௌந்தர்யா நீ வரமாட்டேனு நினைத்தேன் ஆன முன்னாடியே வந்துட்டியே என்று சொல்கிறாள். சீக்கரமா வேலை முடிந்த்து அதன் சீக்கிரம் வந்துவிட்டேன் என்று சொல்கிறான். அதன்பிறகு கண்ணம்மா லக்ஷ்மி பற்றி பாரதி பேச இடையில் குறுக்கிடும் சௌநதர்யா போதும் இங்கேயும் பிரச்சனை பண்ணாத என்று சொல்கிறாள்.
அப்போது பாரதிக்கு வெண்பாவிடம் இருந்து போட்டோ வருகிறது. இதை பார்த்து கடுப்பாகும் சௌந்தர்யா அவ போட்டோ நீ எதுக்கு செல்போன்ல வச்சிருக்க என்று கேட்கிறாள். அதற்கு பாரதி நான் வைத்திருக்கவில்லை. அவதான் போட்டோ எடுத்து அனுப்பிக்கொண்டிருக்கிறாள் என்று சொல்கிறான். அப்போது போட்டோ பார்க்க வரும் ஹேமாவிடம் புதிய கேம் இருக்கு அத விளையாடு என்று பாரதி செல்போன் கொடுக்கிறான்.
அதன்பிறகு மூவரும் உள்ளே சென்று அஞ்சலியின்அப்பா அம்மாவிடம் பேசிகொண்டிருக்கின்றனர். அடுத்து அஞ்சலிக்கு அலங்காயம் நடைபெறும்போது அகில் போட்டோ எடுக்கிறான். அப்போது பாரதி என் வாழ்க்கைதான் இப்படி ஆகிடுச்சி நீயாவது நம்ம குடுமபத்திற்கு இரத்த சம்பந்தம் உள்ள ஒரு குழந்தை பெற்றுகொடு என்று சொல்கிறான். அப்போது ஹேமா உன் பொண்ணு பாரதி என்று அகில் மனதிற்கு நினைத்துக்கொளகிறான்.
அப்போது கண்ணம்மா தனது மகளுடன் ஆட்டோவில்வந்து இறங்குகிறாள். இதை பார்த்து ஹேமா சந்தோஷப்பட, சௌந்தர்யா கண்ணம்மாவை பார்த்து ஷாக் ஆகிறாள். அப்போது மாடியில் இருக்கும் பாரதியும் கண்ணம்மாவை பார்த்த ஷாக் ஆக அத்துடன் இன்றைய எபிசொடு முடிகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil