Tamil Serial Bharathi Kannamma Update : வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வரும் கண்ணம்மா மற்றும் லக்ஷ்மியை பார்த்து சந்தோஷப்படும் ஹேமா சௌந்தர்யாவிடம் சொல்லிவிட்டு கண்ணம்மாவை நோக்கி செல்கிறாள். அப்போது லக்ஷ்மி சௌந்தாயாவை நோக்கி ஓடுகிறாள. ஆனால் கண்ணம்மாவை பார்த்து சௌந்தர்யா அதிர்ச்சியாகி இரட்டை குழந்தை விஷயத்தை கேட்டுவிடுவாளோ எள்ற பயத்தில் இருக்கிறாள். இதை எல்லாம் மேலே இருந்து பார்க்கும் பாரதி கண்ணம்மாவை கோபத்துடன் பார்க்கிறான்.
அப்போது சௌந்தர்யாவிடம் தனது குழந்தை பற்றி கேட்க வரும் கண்ணம்மா, பாரதி இருப்பதை பார்த்து பிறகு கேட்டுக்கொள்ளலாம் என்று அமைதியாகிறாள் அப்போது சௌந்தர்யா உள்ளே சென்றுவிட, கண்ணம்மாவின் அப்பா வந்து அவளை வரவேற்கிறார். அதன்பிறகு உள்ளே செல்லும் கண்ணம்மாவை அவளது சித்தி நலம் விசாரக்கிறாள். அப்போது டாக்டர் தான் உன் பிள்ளைக்கு அப்பா என்று தெரியுமா என்று கேட்கிறாள். அதற்கு கண்ணம்மா தெரியாது என்று சொல்ல சரி அப்புறம் பேசிக்கலாம் என்று அவளது சித்தி கிளம்புகிறாள்.
இதனிடையே கண்ணம்மாவுக்கு பயந்து உள்ளே வரும் சௌந்தர்யா கண்ணம்மா குறித்து தனது கணவரிடம் பேசிக்கொண்டிருக்கிறாள். அப்போது அங்கு வரும் கண்ணம் சௌந்தர்யாவிடம் கேட்க செல்கிறாள். ஆனால் இடையில் பாரதி வந்துவிட்டதால் அமைதியாகிறாள். இதனிடையே சௌந்தர்யாவின் கணவன் போன் பேச வெளியில் செல்ல தனியாக இருக்கும் செளந்தர்யாவிடம் கண்ணம்மா குழந்தை பற்றி கேட்க நினைக்கிறாள்.
ஆனால் அவளை பேச விடாத சௌந்தர்யா அஞ்சலியை ரெடி பண்ண வேண்டும் என்று கூறி அழைத்து செல்கிறாள். இதற்கிடையே அழையா விருந்தாளியாக அங்கு வரும் வெண்பா பாரதியிடம் பேசிக்கொண்டிருக்கிறாள். அப்போது அங்கு சௌந்தர்யாவுடன் வரும் கண்ணம்மாவை வெறுப்பேற்ற பாரதி வெண்பாவை வர்ணிக்கிறான். இதனால் கடுப்பாகும் கண்ணம்மா சௌந்தர்யாவை கூட்டிக்கொண்டு கிளம்புறாள்.
அங்கு அஞ்சலி அறைக்கு சென்றதும் கண்ணம்மாவுக்காக சௌந்தர்யா நகை கொடுக்கிறாள். ஆனால் அதை வாங்க மறுக்கும் கண்ணம்மா உங்க மருமகள் வெண்பா தானே அவளிடமே போய் கொடுங்கள் என்றுசொல்கிறாள். அப்போது பாரதி வெண்பா திருமணம் நடக்கவில்வை என்று சௌந்தர்யா மனதிற்கு நினைத்துகொண்டு கண்ணம்மாவை சமானதானப்படுத்தி நகை அணிவிக்கிறாள். அதன்பிறகு அஞ்சலியை ரெடி பண்ணி அழைத்த வருகினறனர்.
அப்போது இந்த கண்ணம்மாவை இங்கிருந்து அடித்து துரத்த வேண்டும் என்ன பண்ணலாம் என்று வெண்பா யோசிக்க, பாரதியும் கண்ணம்மாவும் ஒருவரை ஒருவர் பார்த்து முறைத்துக்கொள்கின்றனா. இதை சௌந்தர்யா கவனிக்கிறாள். அத்துடள் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil