கண்ணம்மாவுக்கு நீதி கிடைச்சாச்சு... அப்போ சீரியல் முடிஞ்சுதா?
Tamil Serial Update : தற்போது வெண்பாவை பற்றி சற்று உண்மையை தெரிந்துகொண்ட பாரதி அவரை விட்டு விலகியுள்ள நிலையில், கண்ணம்மா நல்லவளா என்பதை தெரிந்துகொள்ள கோவிலுக்கு அழைத்துச்செல்கிறார்.
Tamil Serial Update : தற்போது வெண்பாவை பற்றி சற்று உண்மையை தெரிந்துகொண்ட பாரதி அவரை விட்டு விலகியுள்ள நிலையில், கண்ணம்மா நல்லவளா என்பதை தெரிந்துகொள்ள கோவிலுக்கு அழைத்துச்செல்கிறார்.
Bharathi Kannamma Serial Update In Tamil : விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும்இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நலல வரவேற்பை பெற்று வருகிறது அருண் பிரசாத், ரோஷ்னி ஹரிப்பிரியன் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த இந்த சீரியல் பரபரப்பான திருப்பங்களுடன் அரங்கேறி வந்த நிலையில், திடீரென கண்ணம்மா கேரக்டரில் நடித்து வந்த ரோஷ்னி ஹரிப்பிரியன் சீரியலில் இருந்து விலகினார்.
Advertisment
தற்போது இந்த கேரக்டரில், வினுஷா தேவி நடித்து வரும் நிலையில், இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. தொடக்கத்தில் கண்ணம்மாவின் இரட்டை குழந்தை, வெண்பா பாரதி திருமணம், என பரபரப்பான திருப்பங்களுடன் இருந்த சீரியல் தற்போது ரசிகர்களின் பொருமையை ரொம்பவே சோதிக்கும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டு வருகிறது.
தனது மனைவி கண்ணம்மாவின் கர்ப்பத்தில் சந்தேகப்பட்டு அவரை வீட்டை விட்டு வெளியேற்றிய பாரதி தற்போது கோர்ட் உத்தரவின் காரணமாக அவருடன் ஒரு வீட்டில் ஒன்றாக வசித்து வருகிறார். மருத்துவத்தில் ஒன்றாக படித்த பாரதியை ஒருதலையான விரும்பும் வெண்பா, அவரை திருமணம் செய்துகொள்ள செய்யும் சூழ்ச்சிகள் ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தினாலும், பாரதி ஒரு டாக்டராக இருந்துகொண்டு இதை கண்டுபிடிக்க முடியாத என்ற ஆதங்கமும் ஏற்பட்டுள்ளது.
தற்போது வெண்பாவை பற்றி சற்று உண்மையை தெரிந்துகொண்ட பாரதி அவரை விட்டு விலகியுள்ள நிலையில், கண்ணம்மா நல்லவளா என்பதை தெரிந்துகொள்ள கோவிலுக்கு அழைத்துச்செல்கிறார். அங்கு இருவரும் தனித்தனியாக பொங்கல் வைக்கின்றனர். இதில் யார் பொங்கல் முதலில் பொங்குகிறதோ அவர் பக்கமே நியாயம் இருப்பதாக அர்த்தம் என்று சொல்கின்றனர். இதில் தற்போது கண்ணம்மாவின் பொங்கல் முதலில் பொங்கிவிட்டது. இதனால் பாரதி கண்ணம்மாவை ஏற்றுக்கொள்வாரா என்று எதிர்பார்ப்பு எழந்துள்ளது.
Advertisment
Advertisements
ஆனால் ஒரு சில ரசிகர்கள டிஎன்ஏ டெஸ்ட் ஒன்றை தவிர மற்ற எல்லாவற்றையும் செய்யுங்க என்று கடுமையாக விமர்சித்து வருகினறனர். டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தால் சீரியல் முடிந்துவிடும் என்பதற்காக இயக்குநர் இப்படி ஒரு புது ரூட்டை கண்டுபிடித்துள்ளார் என்றும், இப்போது பொங்கல் சீசன் தான் அதுக்காக இப்படியெல்லாம் பண்ணக்கூடாது என்று ஒரு சில ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “