கண்ணம்மா தன் மகள் பிறந்த நாளில் அவள் ஆசைப்பட்ட அனைத்தையும் செய்வதாக சொல்லிட்டு வெளியில் அழைத்துச்செல்கிறாள். இதில் ஜவுளிக்கடைக்கு சென்று குமாருக்கு கண்ணம்மா சட்டை வாங்கி கொடுகிறாள். ஆனால் குமாரோ, பாப்பாக்கு தானா பர்த்டே எனக்கு எதுக்கு. வேணாம் என சொல்கிறான். ரொம்ப நாளா டிரெஸ் எடுத்து கொடுக்கணும் ஆசைப்பட்டேன். இன்னைக்கு தான் அதுக்கான வாய்ப்பு கெடச்சிருக்கு என்று கண்ணம்மா சொல்கிறாள்.
இதற்கிடையே பிறந்த நாளில், லட்சுமி அந்த ஜவுளிக்கடையில், சிறிது நேரம் வேலைபார்க்க வேண்டும் என்று சொல்கிறாள். இதற்கு சம்மதம் சொன்ன கண்ணம்மா கடை முதலாளியிடம் பேசி, லட்சுமியை கிட்ஸ் செக்ஷனில் வேலைக்கு அமர்த்துகின்றனர். வேலையை தொடங்கும் லட்சுமி, அங்கு வரும் வாடிக்கையாளர்களிடம் சகஜமாக பேசி டிரெஸ் விற்பனை செய்கிறாள். அதன்பிறகு வேலையை முடிக்கும் லட்சுமியிடம் வேலை எப்படி இருந்தது என்று என்று கேட்கிறாள் கண்ணம்மா.
எல்லாம் நல்லா இருந்துச்சி என்று சொல்லும் லட்சுமி, கடை முதலாளியிடம், கஸ்டமர் இல்லாத டைம் இவுங்க எல்லாம் உட்காரலாம்ல என கேட்க கடை முதலாளியோ சரிம்மா சீக்கிரம் கடையில சேர் போட்றேன் என சொல்கிறார். அடுத்து லட்சுமி வேலைபார்த்தற்காக ஐநூறு ரூபாய் சம்பளமாக கொடுக்கிறார். அதனை வாங்க மறுக்கும் லட்சுமி, அதற்கு பதிலாள அம்மாவுக்கு புடவை எடுக்கிறாள். அடுத்து வரும் வழியில் கலெக்டர் ஆபிஸ் முன்பாக ஆட்டோவை நிறுத்த சொல்லும் லட்சுமி, நான் கலெக்டரை பார்க்கனும் என சொல்கிறாள்.
இதை கேட்டு கண்ணம்மா திட்ட, நீதானம்மா நான் எது கேட்டாலும் வாங்கி தர்றேன் சொன்ன, இப்ப இப்படி சொல்ற என கோபப்படுகிறாள் லட்சுமி. பிறகு சம்மதம் சொல்லும் லட்சுமி, டவாலியிடம் சென்று கேட்கிறாள். ஆனால் அவர் அதெல்லாம் முடியாது என சொல்லி விடுகிறார். இந்த சத்தத்தை டேடு கண்ணம்மாவை உள்ளே அழைக்கும் கலெக்டர், என்ன உதவி வேணும் என கேட்க லட்சுமியின் ஆசையை கூறுகிறாள் கண்ணம்மா.
இதை கேட்டு சம்மதம் தரும் கலெக்டர், டவாலி போலிஸ் ஆபிசர்களை அனுப்பி அவளை நிஜ கலெக்டர் மாதிரி அழைத்து வர சொல்கிறார். லட்சுமியிடம் நீங்க எதுக்காக கலெக்டர் ஆகணும்னு ஆசை படுறீங்க என கேட்கும் போது, என் அம்மா மாதிரி கஷடப்படுற எல்லாருக்கும் உதவி செய்யணும் என சொல்கிறாள்.
அதை கேட்டு அவளை என்கரேஜ் பண்ணும் கலெக்டர் தனது சீட்டில் அவளை உட்கார வைக்கிறார். இந்த வயசுல பார்க், பீச் போகனும் சொல்லாம கலெக்டர் ஆபிஸ் வரணும் ஆசைப்பட்டிருக்கா, கண்டிப்பா ஒருநாள் உங்க பொண்ணு கலெக்டர் ஆவ என சொல்கிறார். அதன்பிறகு வரும்போது கிடைத்த மரியாதையுடன் திரும்பி செல்கின்றனர். அவ்வளவுதான் இன்றைய எபிசோடு
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil