Advertisment

Vijay TV Serial: இரும்புக் கம்பியை எடுத்து ஒரே அடி... தப்பித்த வெண்பா..!

Bharathi Kannamma Serial : விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோட்டில என்ன நடந்தது?

author-image
WebDesk
New Update
Vijay TV Serial: இரும்புக் கம்பியை எடுத்து ஒரே அடி... தப்பித்த வெண்பா..!

பிறந்த நாளில் லட்சுமி ஆசைப்பட்டதை செய்ய கண்ணம்மா இருக்கிறாள். ஆனால் ஹேமா கேட்ட எதையும் யாரும் வாங்கி கொடுக்கவில்லை இதனால். ஹேமா சோகமாக இருக்க அஞ்சலி, வந்து, ஹேமாவிடம் ஏன் கோபாமா இருக்க என்று கேட்க எனக்கு பர்த்டேக்கு பிளே ஸ்டேஷன், செல்போன் வாங்கி தர மாட்டேன் சொல்லிட்டாங்க என சொல்கிறாள். அப்போதுஅங்கே வரும் சௌந்தர்யா ஹேமாவிடம் பேச, ஹேமா எந்திரிச்சு செல்கிறாள்.



இதற்கு அஞ்சலி, பாவம் அத்தை சின்ன பிள்ளை ரொம்ப சோகமா இருக்கா என அஞ்சலி சொல்கிறாள். அதன்பிறகு கிப்ட் வாங்க சொல்லி பாரதிக்கு போன் செய்கிறாள. ஆனால், அவன் போன் சுவிட்ச் அப்பில் இருக்க, அடுத்து அகிலுக்கு போன் பண்ணி டிராயிங் புக் மாதிரி ஏதாவது கிப்ட் வாங்கிட்டு வா என சௌந்தர்யா சொல்கிறாள். இதன்பிறகு பிறந்த நாளில் வெளியில் சுற்றிய கண்ணம்மாவும் லட்சுமியும், வீட்டுக்கு வருகின்றனர் அப்போது சுமதியும், துளசியும் அவளுக்காக காத்திருக்கின்றனர்.

Advertisment

அவர்களிடம் கண்ணம்மா சந்தோஷமாக இருப்பதாகா சொல்கிறாள். அதனை கேட்டு இருவரும் மகிழ்ச்சி அமைகின்றனர். அதன்பிறகு பிறந்த நாளில் லட்சுமி கோயிலில் அவள் பூஜை பண்ணது, காரில் சென்றது, ஜவுளிக்கடையில் தனக்கு சேலை வாங்கி கொடுத்தது கலெக்டர் ஆபிஸ் போய், கலெக்டர் சீட்ல உட்கார வைச்சாங்க, என அனைத்தையும் சொல்லி மகிழ்கிறாள்.

இதற்கிடையில் வீட்டில் கோபமாக அமர்ந்திருக்கும் ஹேமாவிற்கு அகில் வாங்கி வந்த பரிசை பார்த்து சந்தோஷம் அடைகிறாள். அப்போது பாரதி போன் ஆப் ஆகி இருப்பதையும், காலையில் வெளியே போனவன் வீட்டிற்கு வாரததை பற்றியும் சௌந்தர்யா அகிலிடம் சொல்கிறாள். அவன் ஹேமா பர்த்டேவுக்கு கண்டிப்பா வந்துடுவான் என்று அகில் சொல்ல 12 மணிக்கு வீட்டிற்கு வரும் பாரதி, தூங்கி கொண்டிருக்கும் ஹேமாவிற்கு பர்த்டே விஷ் பண்ணுகிறான். அப்போது வெண்பா போனிற்கு முயற்சி செய்து பார்க்கும் பாரதி, இன்னும் ரெண்டு நாள் பார்க்கலாம், இல்லன்னா போலீஸ்ல புகார் கொடுத்திடலாம் என முடிவு செய்கிறான்.



துர்காவால் கடத்தப்பட்ட வெண்பா தப்பிக்க முடிவு செய்து யோசிக்கிறாள் அங்கு வரும் துர்கா, உனக்காக இன்னைக்கு வித்தியாசமா ஒரு டிஷ் எடுத்துட்டு வந்துருக்கேன் என சொல்லி பச்சையாக கருவாட்டை கொடுத்து சாப்பிட சொல்கிறான். அப்போது அவனுக்கு போன் வந்து பேசிக் கொண்டிருக்கும்போது, தப்பிக்க முயற்சி செய்யும் வெண்பா, இரும்பு கம்பியால் அவனை அடித்து கட்டி போட்டு தப்பிக்கிறாள். அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bharathi Kannamma Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment