ஹேமாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக தாத்தா, பாட்டி, அகில் என அனைவரும் தீவிரமாக ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். அந்த நேரத்தில் பாரதி பள்ளியில் இருந்து ஹேமாவை அழைத்து வருகிறான். வீட்டிற்கு வரும் ஹேமா பிறந்த நாள் ஏற்பாடுகளை பார்த்து மகிழ்ச்சி அடைகிறாள். அப்போது பிறந்தநாள் விழாவுக்கு லக்ஷ்மி தான் வர வரப்போகிறாள் என்று சொல்ல ஹேமா மகிழ்ச்சி அடைகிறாள்.
அதன்பிறகு பாரதி லக்ஷ்மிக்கும் ட்ரெஸ் எடுத்து கொடுத்தது பற்றி தெரிந்து சௌந்தயார் மகிழ்ச்சியில் இருக்கிறாள்.அப்போது ஹேமா மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்கும் பாரதி, வெண்பா வார்த்தைகளை நினைத்து பார்க்கிறான். வெண்பா இருந்திருந்தால், ஹேமாவை எப்படி கொடுமைப்படுத்தியிருப்பாள் என்று யோசிக்கிறான். அதே நேரத்தில் கண்ணம்மா எப்படி அன்பாக பார்த்துக்கொள்வார் என்றும் யோசித்து பார்க்கிறார் பாரதி. ஆனால் கண்ணம்மாவை பற்றி நினைத்து பார்த்தும் டென்ஷன் ஆகிறான்
அப்போது பர்த்தே பங்ஷனுக்கு வெண்பா வருவதை பார்த்து அனைவரும் சற்று ஷாக் ஆகின்றனர். ஒரு மாதம் ஆள் வரமாட்டாள் என நினைத்தால் இப்போது வந்துவிட்டாலே என்று அனைவரும் யோசிக்க, சௌந்தர்யா அதை நேராக கேட்டுவிடுகிறார். அப்போது தான் ஒரு மாதம் மும்பை போயிருந்ததாகவும், வேலை முடிந்துவிட்டதால் திரும்பி வந்துவிட்டதாகவும் கூறுகிறார்.
அதன்பிறகு வெண்பா பாரதி அறைக்கு சென்றுவிட, எத்தனை முறை அசிங்கப்படுத்தி அனுப்பினாலும் திரும்ப திரும்ப வந்துட்டு இருக்காளே என கோபமாக திட்டும் சௌந்தர்யா, பாரதி வெண்பாவை திருமணம் செய்யப்போவதாக கூறியது பற்றியும் யோசிக்கிறார். அதை யோசித்தக்கொண்டே பாரதியின் அறைக்கு செல்கிறார் சௌந்தர்யா.
அப்போது பாரதியின் அறைக்கு வெண்பா போகும்போது, பாரதி ஹேமாவுடன் அவர் விளையாடி கொண்டிருக்கிறான். இதனால் டென்ஷன் ஆகும் வெண்பா, ஹேமாவை எப்படியாவது வெளியில் அனுப்பவேண்டும் என யோசிக்கிறார். அதற்கு தகுந்தார்போலத, உன்னை பாட்டி கூப்பிடுகிறார் என பொய் சொல்லி ஹேமாவை வெளியில் அனுப்புகிறாள் வெண்பா. அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil