ஹேமா பர்த்டே பங்ஷனுக்கு வரும் வெண்பா, சௌந்தர்யாவை பார்த்துவிட்டு, பாரதியை பார்க்க மாடிக்கு சென்று, பார்க்கிறாள். அங்கு ஹேமாவுடன் விளையாடி கொண்டிருக்கு பாரதியை பார்த்து ஆத்திரப்படும் வெண்பா ஹேமாவை கீழே பாட்டி கூப்பிடுவதாக கூறி அனுப்புகிறார். இதற்கிடையே வெண்பாவை ஃபாலோ பண்ணி மேலே வரும் சௌந்தர்யா என்ன பேசுகிறார்கள் என்று கவனித்துக்கொண்டிருக்கிறாள்.
நான் வந்தது பிடிக்கலையா? நீ சொல்லி தான் வந்தேன். உனக்கும் பிடிக்கலன்னா சொல்லு நான் கிளம்பிறேன் என வெண்பா பாரதியிடம் சொல்ல, அதெல்லாம் ஒன்னும் இல்லை, ஹேமா கூட விளையாடிட்டு இருந்தேன் என சொல்கிறான் பாரதி. அதன்பிறகு என்கிட்ட ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லனும்னு சொன்னில அது என்ன வெண்பா கேட்க, நீ நினைக்குறதை எல்லாம் என்னால சொல்ல முடியாது என பாரதி கடுப்பாக பேசுகிறான்.
இதனால் அதிர்ச்சியடையும் வெண்பா, நீ என்னை கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்பட்டீல என கேட்கும்போது, ஆமா அப்படிதான் நினைச்சேன். ஆனா இப்போ அது நடந்தா அது நமக்குள்ள இருக்க பிரண்ட்ஷிப்பை கெடுத்துடும் என சொல்கிறான். இதனால் கடுப்பாகும் வெண்பா, உனக்கு என்ன ஆச்சி, என்ட பேசுனதுக்கும், ஹான்பிட்டல் வருவதற்கும் இடையில என்ன நடந்துச்சி என்று கேட்க, ஹாஸ்பிட்டலில் வெண்பா அந்த குழந்தையிடம் நடந்துகொண்ட விதத்தையும், அதை தான் பார்த்ததையும் கூறுகிறான்
இதை கேட்டு வெண்பா அப்போ நான் சித்தி கொடுமை பண்ணுவன்னு நினைக்கிறியா? நீ இப்படி பேசுறது எனக்கு அசிங்கமா இருக்கு என சொல்கிறாள். அடிப்பட்டு வந்த பொண்ணை, ஹாஸ்டல்ல சேர்க்க சொல்ற. சித்தின்னா இப்படிதான் பண்ணுவாங்கன்னு சொல்ற என பாரதி கேட்க, அதிர்ச்சியில் பேசும் வெண்பா, உன்னோட வாழ்க்கைல என்னோட இடம் என்ன என கேட்கிறாள்.
இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருக்கும் சௌந்தர்யா, இதுக்கு மேல இவளை விடக்கூடாது என நினைத்து வெண்பாவை கீழே அழைத்து செல்கிறாள் சௌந்தர்யா. இதற்கிடையில் பாரதி வாங்கி கொடுத்த டிரெஸ் போட சொல்லி லட்சுமியை பர்த்டே பங்க்ஷனுக்கு கிளப்புகிறாள் கண்ணம்மா. அதன்பிறபு ரெடியாகி வரும் லட்சுமியை ஆட்டோவில் ஏற்றி விடுகிறாள் இதற்கிடையே வெண்பாவை அழைத்துக்கொண்டு கீழே வரும் சௌவுந்தர்யா, அவரை அனுப்பி விட்டு, மாடியில் நடந்த்து குறித்து சந்தோஷமாக வேணு, அகிலிடம் சொல்கிறாள். மேலும் வெண்பாவை கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு நினைக்கிற அவன், அதற்கு முற்றுப்புள்ளி வைச்சாச்சு என்கிறாள்.
அதன்பிறகு கீழே வரும் பாரதி, என்னை தேடி யாராவது பசங்க வந்தாங்களா. என்னோட ஸ்பான்சர்ல படிச்சு வேலைக்கு போன பசங்க என்னை பார்க்க வர்றேன் என சொல்லிருந்தாங்க என கேட்கிறான். யாரும் வரல, வெளியே காட்டுற அக்கறைல, பாதியாவது வீட்ல காட்டுனா நல்லாருக்கும் என சௌந்தர்யா சொல்ல, கோபமாகும் பாரதி அங்கிருந்து கிளம்புகிறான்.
அதன்பிறகு வேணுவும் சௌந்தயாவும் பேசிக்கொண்டிருக்க, போன் பண்ணும் கண்ணம்மா அத்தை லட்சுமிய நான் ஆட்டோல ஏத்திவிட்டேன். இந்நேரம் அங்க வந்துருக்கணுமே அத்தை என கண்ணம்மா சொல்லும் போது, பாட்டி என சொல்லி கொண்டே வீட்டிற்குள் வருகிறாள் லட்சுமி. அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.