கோவிலுக்கு சென்ற சௌந்தயா வர லேட் ஆனதால், பிறந்த நாள் கேட் வெட்ட அனைவரும் காத்திருக்கின்றனர். அப்போது பாரதி செய்த உதவிகளை எடுத்துக்கூறும் லட்சுமி அவருக்கு நன்றியும் கூறுகிறாள். ஆனால் இதெல்லாம் வேண்டாம் என்று பாரதி தடுக்க, நமக்கு உதவி செஞ்சவங்கள மறக்க கூடாதுன்னு எங்கம்மா எனக்கு சொல்லி இருக்காங்க என லட்சுமி சொல்கிறாள்.
இதை கேட்டு அனைவரும் பாராட்டும்போது, டாக்டர் அங்கிள எனக்கு என் அப்பாவை பார்க்குற மாதிரி இருக்கு என லட்சுமி சொல்கிறாள். பரவாயில்லை குட்டி நீ அப்பான்னு கூப்பிடு, உன்னை எதுவும் தப்பா நினைக்க மாட்டாரு என என வேண்ணு சொல்லும்போது, இல்லை தாத்தா எனக்கு திடீர்ன்னு அப்படி கூப்பிட ஒரு மாதிரி இருக்கு என லட்சுமி கூறுகிறாள். இவர்களின் பேச்சை கேட்டு கடுப்பாகி நிற்கும் வெண்பா, சாந்தியை வெளியே அழைத்து வந்து லட்சுமியை வெளிய அனுப்பத்தான் உன்னை இங்க கூட்டிட்டு வந்தேன். வருகிறாள். ஏதாவது பண்ணனும் சாந்தி, என கூறுகிறாள்.
மேலும் லட்சுமி அவனை அப்பான்னு சொல்ற. இவனும் அவள தூக்கி வச்சு கொஞ்சுறான். என சொல்லும்போது, லட்சுமி கண்ணம்மாவுக்கு பிறந்த பொண்ணுன்னு சொல்லிருங்க அம்மா, என சொல்கிறாள். அதற்கு வெண்பா, ஐடியா நல்லாத்தான் இருக்கு. ஆனா இவ்வளவு நாள் உண்மை தெரிஞ்சு, ஏன் என்கிட்ட சொல்லலன்னு அவன் கேட்டா என்ன பண்றது என கேட்கிறாள்.
அதன்பிறகு கண்ணம்மாவுக்கு போன் பண்ணி, லட்சுமி உன்னோட பொண்ணுன்னு பாரதி சாருக்கு தெரிஞ்சு போச்சு, இங்க பெரிய பிரச்சனைன்னு சொல்லுவோம். அவ பதறி அடிச்சுட்டு ஓடி வருவா என சொல்ல, நல்ல ஐடியா என சொல்லும் வெண்பா, திட்டத்தின்படி கண்ணம்மாவுக்கு போன் பண்ணி சொல்கிறார்கள். இதற்கிடையில் சௌந்தர்யா வராத நிலையில், லட்சுமி ஹேமா மட்டும் கேக் கட் பண்ணட்டும் என சொல்கிறாள்.
அப்போது ரெட்டு பேரும் சேர்ந்து தான் கேக் வெட்டனும் என பாரதி சொல்ல இருவரும் கேக் வெட்டுகின்றனர். அப்போது மாடிப்படி ஏறி வரும், கண்ணம்மா, ரெண்டு குழந்தைகளும் ஒன்றாக கேக் வெட்டுவதையும், இருவரும் மாறிமாறி கேக் ஊட்டி கொள்வதையும், பாரதி அவர்கள் இருவருக்கும் கேக் ஊட்டி விடுவதையும் சந்தோஷமாக பார்த்துக்கொண்டிருக்கிறாள். அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil