ஷேமாவுடன் பாரதி அமெரிக்க செல்ல செல்லவிருப்பதை சாந்தியிடம் சொல்லி கோபப்படும் வெண்பா, அன்னைக்கு ஹேமா பிறந்தநாள் அன்னைக்கு கண்ணம்மாவை அவன் வீட்டுக்கு வர சொன்ன ஐடியாவால தான் இதெல்லாம் என சாந்தியை திட்டுகிறாள். பாரதியை அமெரிக்கா செல்வதை தடுக்க என்ன செய்வதென்று யோசிக்கிறாள். இதற்கிடையே ஹேமாவை பாரதி வெளிய கூப்பிடும் போது, அவள் வர மறுக்கிறாள்.
அப்போது சௌந்தர்யாவும் எங்க கூட்டிட்டு போற என ஹேமாவை எங்கு கூட்டிகிட்டு போனாலும் எழுதி கொடுத்துட்டு தான் போகனுமா என கேட்டுவிட்டு, ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போறேன் என சொல்லிவிட்டு கிளம்புகிறான் ஆனால் அவன் ஹாஸ்பிட்டல் போகாமல், ஹேமாவை அமெரிக்கா கூட்டிச்செல்ல பாஸ்போர்ட் ஆபிஸ்க்கு அழைத்து வருகிறான். அங்கு அவளை வெளியில் உட்கார வைத்துவிட்டு, பாரதி மட்டும் உள்ளே செல்கிறான்.
அப்போது பாஸ்போர்ட் ஆபீஸ்க்கு சாப்பாடு கொடுக்க வரும் கண்ணம்மா, அங்கிருக்கும் ஹேமாவிடம் பேசிக்கொண்டிருக்கிறாள். அப்போது அங்கு வரும் பாரதி ஹேமாவை போட்டோ எடுக்க உள்ள கூப்பிடுவதாக உள்ளே அனுப்பிவிட்டு, எதுக்கு என்னை பாலோ பண்ணிக்கிட்டு இருக்க என கண்ணம்மாவிடம் சண்டை போடுகிறான். இதற்கு கண்ணம்மா, என்கிட்ட சண்டை போடுறதுக்கு பதிலா, உன் வீட்டு ஆளுங்க கிட்ட போய், கண்ணம்மா கிட்ட அன்னம், தண்ணீ புழங்காதிங்கன்னு சொல்லு என சொல்கிறாள்
அதற்கு என்கிட்ட இப்போ நல்லவ மாதிரி பேசிட்டு, வீட்டுக்கு போய் அம்மாகிட்ட போன் போட்டு அழுவ. இனிமே டெய்லி ரெண்டு பேரும் போன் போட்டு மாறிமாறி அழுதுகோங்க. நான் அமெரிக்கா கிளம்பி போக போறேன் என சொல்கிறான். நல்லபடியா போய்ட்டு வா. ஆனா என்ன உன் பொண்ணுக்கு தான் இதுல விருப்பம் இல்லை. அவளை பெத்தவ ஒழுங்கா இருந்தா, ஹேமா ஏன் சமையல் அம்மான்னு என்னை தேடி வர்ற போற என கேட்கிறாள்.
இதற்கிடையில் பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஹேமா புல் பண்ணும் பார்மில் அம்மா பெயர் இருக்கும் இடத்தில், கண்ணம்மா பெயர் இருப்பதை பார்த்து சந்தோசம் அடைகிறாள். தொடர்ந்து பாரதியிடம் பேசும் கண்ணம்மா, இதுக்கப்புறம் ஹேமா கிட்ட நான் நெருங்கி பழகுவேன். அவ வாயாலேயே என் அம்மா, அப்பாவை விட சமையல் அம்மா தான் என்மேல அதிகம் பாசம் காட்றாங்கன்னு சொல்ல வைப்பேன் என என சவால விட்டு கிளம்புகிறாள்
இதற்கிடையில் பாஸ்போர்ட் ஆபிஸில் இருந்து ஹேமாவுடன் காரில் வந்து கொண்டிருக்கும் போது தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக பாதியில் வண்டியை நிறுத்துகிறான் அப்போது எதிர்பக்கம் கண்ணம்மா நிற்பதை பார்த்து ஹேமா சமையல் அம்மா என கத்திக்கொண்டு ரோட்டை கிராஸ் பண்ணி வருகிறாள். அப்போது காரில் வரும் சிலர் ஹேமாவை கடத்தி கொண்டு செல்கின்றனர். இதனிடையில் வெளியே வரும் பாரதி, காரில் ஹேமா இல்லாததை பார்த்து விட்டு, எதிரில் நிற்கும் கண்ணம்மாவுடன் அவள் சென்றிருப்பதாக நினைத்து அவள் போகும் ஆட்டோவை பின் தொடர்ந்து செல்கிறான். அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.