கண்ணம்மாவை கையெடுத்து கும்பிடும் பாரதி… அடுத்த திருப்பம் இதுதானா?

Tamil Serial Update : ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் பாரதி கண்ணம்மா சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வைரலாகி வருகிறது.

Bharathi Kannamma Viral Video Update : விஜய்டிவியில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதில் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு முக்கிய இடம் உண்டு. திருமணமான ஒரு பெண் தனது வாழ்க்கையில் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் கடந்த சில மாதங்களாக இந்த சீரியலில் பல அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகிறது.

பாரதி வெண்பா திருமணம், லக்ஷ்மி அம்மா, கண்ணம்மாவின் இரட்டை குழந்தை என பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துகொண்டிருக்கும் நிலையில், இந்த சீரியலில் அடுத்து என்ன திருப்பம் அரங்கேற போகிறது என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இதன் காரணமாக இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தையும் பிடித்துள்ளது.  இதில் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் ஷூட்ங் ஸ்பாட் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது.

அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள வீடியோ பதிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில் கடற்கரை அருகில் கண்ணம்மா மற்றும் பாரதி இருவரும் சந்திப்பது போல ஒரு காட்சியை எடுத்து இருக்கின்றனர். ஏற்கனவே இரட்டை குழந்தை பற்றிய உண்மையை தெரிந்துகொண்ட கண்ணம்மா தனது இன்னொரு குழந்தை யார் என்று தேடிக்கொண்டிருக்கிறார். இந்த தேடலுக்கு அடுத்தடுத்த எபிசோடுகளில் பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனாலும் கண்ணம்மாவின் மனதில் பாரதியிடம் வளரும் ஹேமாதான் தனது இரண்டாவது மகளாக இருக்குமோ என அவர் சந்தேகத்தில் இருக்கிறார். கண்ணம்மாவுக்கு மட்டும் உண்மை தெரியவந்தால் சீரியலில் மிகப்பெரிய திருப்பம் வரும். அதற்கு அஸ்திவாரம் போடும் விதமாக தற்போது பாரதி கண்ணம்மா இருவரும் சந்திப்பது போன்ற காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்டுகிறது.  தற்போது வெளியாகியுள்ள காட்சியில், இருவரும் கடற்கரை பகுதியில் தான் சந்தித்து இருக்கின்றனர். கண்ணம்மாவை பாரதி கையெடுத்து கும்பிடுவது போல தான் செய்கிறார்.

அதை பார்த்த நெட்டிசன்கள் பாரதி எதற்காக கண்ணம்மாவுக்கு நன்றி கூற வேண்டும் என கேள்விகளை எழுப்பி வருகின்றனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial bharathi kannamma shooting spot video viral

Next Story
Tamil Serial: சரவணன் – சந்தியாவுக்கு என்ன ஆச்சு? பதற்றத்தில் குடும்பத்தினர்!Vijay TV Raja Rani 2 serial, Raja Rani 2 serial today episode, what happens to sandhya and saravanan, family gets tension, விஜய் டிவி, ராஜா ராணி 2 சீரியல், சரவணன் சந்தியாவுக்கு என்ன ஆச்சு, பதற்றத்தில் குடும்பத்தினர், ஆல்யா மானாசா, சித்து, Tamil serial news, raja rani 2, alya manasa, sidhu, praveena, saivam ravi sundaram, raja rani 2 latest news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X