/tamil-ie/media/media_files/uploads/2021/09/Bharathi-kananmma.jpg)
Bharathi Kannamma New Viral Video : விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதன்மையான இடத்தை பிடித்து வருகிறது. குடும்பத்தில் நடக்கும் சண்டை சச்சரவுகளை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் கடந்த சில வாரங்களாக அதிரடி திருப்பங்களுடன் அரங்கேறி வருகிறது.
பாரதி கண்ணம்மாவுடன் தங்கியது, லக்ஷ்மி கண்ணம்மா பொண்ணுதான் என்று பாரதி கண்டுபிடித்தது. அடுத்து அஞ்சிலியின் வளைகாப்பு, கண்ணம்மா இரட்டை குழந்தை விவகாரம் என பல அதிரடி திருப்பங்கள் நடந்துள்ளது. இனி வரும் எபிசோடுகளில் மேலும பல திருப்பங்கள் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் நிலையில், பாரதி கண்ணம்மாவில் அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
கடந்த வாரம் சீரியல் ஒரு சுவாரஸ்யமான டுவிஸ்ட்டுடன் முடிந்தது, இந்த வாரம் சீரியலில் பெரிதாக மறைக்கப்பட்ட ஒரு விஷயம் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது இந்த சீரியல் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. அதில் கண்ணம்மா, வெண்பாவிடம் ஏதோ ஒரு விஷயத்திற்காக கெஞ்சுவது போல் தெரிகிறது.
வெண்பா, கண்ணம்மாவிடம் உனது 2வது குழந்தை யார் என்று தனக்கு தெரியும், யார் என சொல்ல வேண்டும் என்றால் விவாகரத்தில் கையெழுத்து போட வேண்டும் என கூறுவதாகவும், இதை நம்பி கண்ணம்மா குழந்தை பாசத்தில் உடனடியாக கையெழுத்து போட முடிவு செய்வதாகவும், இதை தெரிந்துகொண்ட சௌந்தர்யா கடைசி நேரத்தில் உண்மையை கூறிவிடுவதாக கதை அமைக்கப்படும் என்று ரசிகர்கள கூறி வருகின்றனர். இது எந்த அளவிற்கு உண்மை என்பது அடுத்தடுத்த எபிசோடுகளில் தெரியவரும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.