/tamil-ie/media/media_files/uploads/2021/08/Bharathi-Kannamma-2.jpg)
Bharathi Kannamma Serial Episode : வயிற்று வலியால் துடித்துக்கொண்டிருக்கும் லக்ஷ்மியை, பாரதி தனது காரில், ஏற்றிக்கொண்டு மருத்துவமனை செல்கிறான். போகும் வழியில் லக்ஷ்மிக்கு இதற்கு முன் இப்படி வயிற்றுவலி வந்திருக்கிறதா என்றும் கேட்கிறார். இல்லை இதுதான் முதல் முறை என அவர் கூறுகிறார். இதனையடுத்து லக்ஷ்மியின் பெற்றோரை அழைத்து தகவல் சொல்ல நினைக்கும் பாரதி, கண்ணம்மாவுக்கு போன் செய்ய நினைக்கிறான். ஆனால் நேரத்தை வீணடிக்காமல் மருத்துவமனைக்கு செல்கிறான்.
இதனிடையே வீட்டில் அகில் மற்றும் அஞ்சலி இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது அஞ்சலிக்கு திடீர் நெஞ்சுவலி வருகிறது. இதனால் அகிலன் உடனே அவன் அப்பாவை அழைக்கிறான். அடுத்து அவனது அப்பா பாரதிக்கு போன் செய்கிறான். ஆனால் அவன் லக்ஷ்மியை காரில் அழைத்து சென்றுகொண்டிருப்பதால் போனை எடுப்பதில்லை. அப்போது எதேர்ச்சையாக அங்கு வரும் வெண்பா அஞ்சலியை பார்க்கிறாள்.
ஆனால் வெண்பா மீது நம்பிக்கை இல்லாத அகிலன் அவள் அஞ்சலியை பார்க்க வேண்டாம் என்று கூறுகிறான் ஆனால் சௌந்தர்யா மற்றும் அப்பா இருவரும் கட்டாயப்படுத்தி ட்ரீட்மெண்ட் அளிக்க வைக்கின்றனர். அப்போது ரிப்போர்ட்டை வாங்கி பார்க்கும் வெண்பா அஞ்சலிக்கு பெரிய பிரச்சனை இருப்பதைதெரிந்துகொள்கிறார். குழந்தை வளர வளர உன் உயிருக்கே கூட ஆபத்து வரும் என சொல்கிறார்.
அது ஏற்கனவே எனக்கு தெரியும், அதை யாரிடமும் சொல்லிவிடாதே என அஞ்சலி கூறுகிறாள். இதை கேட்டு சந்தோஷப்படும் வெண்பா அகிலனை பழிவாங்க இதை வைத்து புது திட்டம் போடுகிறார். இதனிடையே பாரதி ஹாஸ்பிடலில் லக்ஷ்மிக்கு சிகிச்சை அளிக்க வைக்கிறார். லட்சுமி தான் தோழி ஒருவருடன் சாப்பாட்டை எக்ஸ்சேஞ்ச் செய்து பர்க்கர் சாப்பிட்டதாக கூறுகிறாள்
இதனைத் தொடர்ந்து லக்ஷ்மியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க அவளது ஸ்கூல் டைரியை பார்க்கிறான் பாரதி. அப்போது அதில் கண்ணம்மா தான் அம்மா என போட்டோ ஒட்டப்பட்டு இருப்பதை பார்த்து ஷாக் ஆக அத்துடன் முடிகிறது இன்றைய எபிசொடு.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.