Bharathi Kannamma Seral Episode Update : உன் குழந்தை எங்கே இருக்கிறது என்பது எனக்கு மட்டும் தான் தெரியும் என்று சொல்லும் வெண்பா, நான் என்ன சென்னாலும் கேட்கனும் அப்போதான் உன் குழநதை உனக்கு கிடைக்கும் என்று கண்ணம்மாவிடம் சொல்கிறாள். அதற்கு கண்ணம்மா சம்மதம் சொல்கிறாள். அதன்பின் தினமு நீ எனக்கு போன் செய்து மிஸஸ் பாரதி வெண்பா பேசுறீங்களா என்று கேட்க வேண்டும் என்று சொல்கிறாள். இதை கேட்டு கோபமாகும் கண்ணம்மா ஒன்றும் செய்ய முடியாமல் சம்மதம் சொல்கிறாள். அதன்பிறகு கண்ணம்மாவின் கண்களை கட்டி காரில் அழைத்துக்கொண்ட செல்கிறாள்.
இதனிடையே சௌந்தர்ய தனது கணவருடன் கண்ணம்மா வீட்டிற்கு வருகிறாள். அப்போது அங்கு கண்ணம்மா இல்லாத்தால், லக்ஷ்மியிடம் பேசிக்கொண்டிருக்கினறனர். அதன்பிறகு லக்ஷ்மி சாப்பிடுவதற்காக சௌந்தயா சமையல் செய்கிறாள். இதனிடையே அறையில் அகிலும் அஞ்சலியும் பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது அஞ்சலி கோவிலில் சென்று பரிகாரம் செய்வது பற்றி சொல்கிறாள். அதைகேட்டு கோப்ப்படும் அகில் அதெல்லாம் வேண்டாம், வேணுனா ஹாஸ்பிடல் போய் கம்ளீட் செக்கப் பண்ணலாம என்று சொல்கிறான்.
அதை கேட்டு அஞ்சலி வேண்டாம் என்று சொல்லும் அஞ்சலி கோவில என் நம்பிக்கை அது ஏன் உனக்கு புரிய மாட்டேங்கிது என்று கேட்கிறாள். அதற்கு அகில் நீ படிச்ச பொண்ணு எது நல்லது என்று முடிவு பண்ணிக்கோ என்று சொல்லிவிட்டு கிளம்புகிறான். இதற்கிடையே கண்ணம்மாவின் கண்ணனை கட்டி காரில் கூட்டி வரும் வெண்பா அவளை பார்த்த இடத்திலேயே இறக்கி விடுகிறாள். அப்போது தனது மகள் எங்கு இருக்கிறாள் என்று கேட்கும் கண்ணம்மாவிடம் நான் சொன்னதை செய் அப்புறம் உன் மகளை காட்டுகிறேன் என்று சொல்கிறாள்.
அதன்பிறகு வீட்டில் சமையல் செய்த சௌந்தர்யா அதை லக்ஷ்மிக்கு ஊட்டி விடுகிறாள். அதன்பிறகு மூவரும் சேர்ந்து செல்பி எடுக்க அப்போது கண்ணம்மா உள்ளே வருகிறாள். அப்போது புள்ளைக்கு சாப்பாடு கூட செய்யாம எங்கமா போய்ட்டு வர்ற என்று சௌந்தர்யா கேட்க, சாப்பாடு கொடுப்பவர்களிடம் பணம் வாங்க சென்றதாக கண்ணம்மா சொல்கிறாள். அப்போது லக்ஷ்மி நான் பாட்டி கூட அவங்க வீட்டுக்கு போய்விட்டு வருவதாக சொல்ல கண்ணம்மா வேண்டாம் என்று சொல்கிறாள்.
அப்போது சௌந்தர்யா ஏன் என்று கேட்க, என்னை நிம்மதியா வாழ விடுங்க என்று கண்ணம்மா சொல்கிறாள் இதை கேட்டு ஷாக் ஆகும் செளந்தர்யா லக்ஷ்மியையும் கணவரையும் வெளியில் அனுப்பிவிட்டு கண்ணம்மாவிடம் தனியாக பேசுகிறாள். அப்போது கண்ணம்மா உங்க வீட்ல இருக்க உங்க பையன் என்மேல இருக்க கோவத்த லக்ஷ்மி மேல காமிச்சா என்னால தாங்க முடியாது. என்னோட இன்னொரு பொண்ணு எங்க இருக்கானு தெரியல, இருக்கற ஒரு பொண்ணுயும் நான் நல்லபடியா பாத்தக்கனும் என்று சொல்கிறாள்.
இதை கேட்டு சௌந்தர்யா உன்னோட எல்லா பிரச்சனைக்கும் நான்தான் காரணம் என்று மனதிற்குள் நினைத்தக்கொண்டு உன் பொண்ணு சீக்கிரம உனக்கு கிடைப்ப அவ எங்க இருந்தாலும் நல்லாருப்பா என்று சொல்கிறாள். அதற்கு கண்ணம்மா என் பொண்ண்ணு எங்க இருக்கானு உங்களுக்கு தெரியுமா அத்தை என கேட்கிறாள். அதற்கு சௌந்தர்யா அமைதியாக இருக்க நீங்க தெரிஞ்சாலும் சொல்ல மாட்டீங்க என்று சொல்லும்போது வெளியில் சென்ற லக்ஷ்மி வீட்டுக்கு வருகிறாள். அதன்பிறகு சௌந்தர்யா அங்கிருந்து கிளம்புகிறாள் அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil