scorecardresearch

வெண்பாவின் சுயரூபத்தை தெரிந்து கொண்ட பாரதி… பரபரப்பாகும் பாரதி கண்ணம்மா

பாரதியை அடிக்கும் சௌந்தர்யா வெண்பாவை திருமணம் செய்துகொள்ள காரணம் என்ன என்று கேட்கிறார்

வெண்பாவின் சுயரூபத்தை தெரிந்து கொண்ட பாரதி… பரபரப்பாகும் பாரதி கண்ணம்மா

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா பாரதியை ஏமாற்றியது தெரிந்துவிட்டதால் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளதால் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியின் முக்கிய சீரியலிகளில் ஒன்று பாரதி கண்ணம்மா. அருண் பிரசாத்,  வினுஷா தேவி. ஃபரீனா ஆசத் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியல் கடந்த சில மாதங்களாக ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கும் வகையில் இருந்துது. இதனால் பாரதி கண்ணம்மாவின் தீவிர ரசிகர்கள் கூட சீரியல் எப்போது முடியும் என்று கேட்க தொடங்கிவிட்டனர்.

இதனிடையே தற்போது பாரதி கண்ணம்மா பரபரப்பின் உச்சமாக சென்றுகொண்டிருக்கிறது. தான் கர்பபமாக இருப்பதாகவும், அந்த குழந்தைக்கு அப்பாவாக இருக்க நீ என் கழுத்தில் தாலி கட்ட வேண்டும் என்றும் இல்லை என்றால் நான் தற்கொலை செய்துகொள்வேன் என வெண்பா கூறியதால், வேறு வழியில்லாமல் பாரதி வெண்பாவை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து கோவிலுக்கு செல்கிறார்.  

இன்றைய எபிசோட்டில் உண்மை தெரிந்த கண்ணம்மா பாரதியின் குடும்பத்தினர் மற்றும் வெண்பாவின் மாப்பிள்ளை அம்மா என அனைவரும் கோவிலுக்கு வந்துவிடுகின்றனர். அப்போது பாரதியை அடிக்கும் சௌந்தர்யா வெண்பாவை திருமணம் செய்துகொள்ள காரணம் என்ன என்று கேட்க, அவள் கர்ப்பமாக இருக்கிறாள் அந்த குழந்தைக்கு ஒரு சமூக அந்தஸ்து வேண்டும் என்பதற்காக தாலி கட்ட முடிவு செய்ததாக பாரதி கூறுகிறார்.

இதை கேட்டு அனைவரும் அதிர்ச்சியாக வெண்பாவின் கர்ப்பத்திற்கு நீ காரணமா என்று சௌந்தர்யா கேட்க, அதற்கு பாரதி இல்லை என்று சொல்கிறார். அப்புறம் எதற்காக நீ அப்புறம் நீ எதுக்காக தாலி கட்ட முடிவு செய்தாய் எனறு கேட்க, வெண்பாவின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பது அவளுக்கே தெரியாது, அதனால் அந்த குழந்தையை கலைக்க மனமில்லாததால், அதற்கு ஒரு சமூக அந்தஸ்து கிடைக்க தாலி கட்ட முடிவு செய்ததாக கூறுகிறார்.

இதை கேட்டு அதிர்ச்சியாகும் கண்ணம்மா நீ பெத்த குழந்தைக்கு அப்பாவா இருக்க உனக்கு மனசு இல்ல எவனுக்கோ பிறக்க போற குழந்தைக்கு அப்பாவா இருக்க போகிறாயா என்று கேட்கிறார். அதன்பிறகு ஷர்மிளா வெண்பாவிடம் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று கேட்க, ரோகித் தான் தான் அந்த கர்பபத்திற்கு காரணம் என்று உண்மையை சொல்லிவிட்டு இது வெண்பாவுக்கும் தெரியும் என் சொல்லி விடுகிறார்.

இதை கேட்டு அதிர்ச்சியாகும் பாரதி வெண்பாவின் கன்னத்தில் ஒரு அறைவிட்டு, நான் உன்னை ஒரு நல்ல ப்ரண்டா பார்த்தேன். ஆனால் நீ என்னை யூஸ் பண்ணிக்கிட்ட என்று கோபப்பட, அதற்கு உன்மேல் உள்ள காதலால் இப்படி செய்துவிட்டேன் என்று வெண்பா சொல்கிறார். உடனே சௌந்தர்யா எல்லா பழியையும் தூக்கி வெண்பா மேல போட்டாத அவ எப்படி தான் சொல்லியிருந்தாலும் உனக்கு எங்க போச்சு புத்தி என்று தாலி கட்ட முடியாது இன்னும் விவாகரத்து ஆகலனு சொல்ல வேண்டியதானே என்று சொல்கிறார்.

இப்போ தாலி கட்டிருந்தா ரெண்டு பேரும் சேர்ந்து ஜெயிலுக்கு போய்ருக்க வேண்டிதான் என்று கண்ணம்மா சொல்கிறார். எங்களிடம் ஒரு வார்த்த சொல்லியிருந்தால எல்லாரும் ஒன்னா உக்கார்ந்து பேசியிருப்போமே என்று சௌந்தர்யா கேட்க பாரதி தலை குணிந்து நிற்கிறார் அத்துடன் எபிசோடு முடிகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial bharathi kannamma today episode update in tamil

Best of Express