நெக்ஸ்ட் லெவலுக்கு ரெடியான வினுஷா... மாடர்ன் உடையில் வைரல் படங்கள்

சமூக வலைதளமான டிக்டாக்கில் டப்மாஷ் வீடியோ வெளியிட்டு வந்தவர் வினுஷா தேவி

சமூக வலைதளமான டிக்டாக்கில் டப்மாஷ் வீடியோ வெளியிட்டு வந்தவர் வினுஷா தேவி

author-image
WebDesk
New Update
நெக்ஸ்ட் லெவலுக்கு ரெடியான வினுஷா... மாடர்ன் உடையில் வைரல் படங்கள்

பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் கவனம் ஈர்த்துள்ள நடிகை வினுஷா தேவி தற்போது மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்த ரோஷ்ணி ஹரிப்பிரியன் அந்த சீரியலில் இருந்து விலகியதை தொடர்ந்து தற்போது கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார்.

publive-image
Advertisment
Advertisements

சமூக வலைதளமான டிக்டாக்கில் டப்மாஷ் வீடியோ வெளியிட்டு வந்த வினுஷா தேவி, திமிரு படத்தில் வில்லியாக நடித்த ஸ்ரேயா ரெட்டி வேடத்தில் இவர் வெளியிட்ட வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

publive-image

முன்பே சமூக வலைதளங்களில் மூலம் பிரபலமாகினாலும் பாரதி கண்ணம்மா முன்னணி சீரியல் நடிகையாக அவரை உயர்த்தியது. சினிமா மற்றும் சின்னத்திரையில் ஜொலிக்க நிறம் ஒரு தடையில்லை என்பதை பலருக்கும் உணர்த்திய விணுஷா தற்போது கண்ணம்மாவாக கலக்கி வருகிறார்.

publive-image

இதனிடையே தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா குறித்து உண்மையை தெரிந்து கொண்ட பாரதி கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ நினைக்கிறார். ஆனால் இதை மறுத்த கண்ணம்மா தனது கிராமத்திற்கு சென்றுவிட்டார். தற்போது கதைக்களம் கிராமத்தை மையமாக வைத்து நடைபெற்று வரும் நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

publive-image

இதனிடையே சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் வினுஷா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bharathi Kannamma Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: