Tamil Serial Bharathi Kannamma Rating Update : சுய சிந்தனை இல்லாமல பிறர் சொல்லை நம்பி முடிவு எழுத்தால் அது பாதகத்தில் தான் முடியும் என்பதற்கு பாரதி கண்ணம்மா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. விஜய் டிவியின் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், யார் எது சொன்னாலும் அதில் உண்மை இருக்கிறதா என்பதை ஆராய்ந்து அதற்கு தகுந்தார்போல் முடிவு எடுக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
பாரதி என்ற மருத்துவர் தனது கணணம்மா என்ற ஏழை வீட்டு பெண்னை காதலித்து திருமணம் செய்துகொள்கிறார். ஒரு கட்டத்தில் கண்ணம்மா கர்ப்பமாக அந்த கர்ப்பத்திற்கு பாரதி காரணம் இல்லை என்று அவரது தோழி வெண்பா சொன்ன பொய்யை நம்பி மனைவியை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார். தற்போது வெண்பாவின் சுயரூபம் கொஞ்சம் தெரிந்துகொண்ட பாரதி அவளை வி்ட்டு விலகி நீதிமன்றம் உத்தரவின் படி கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சட்டவிரோத குற்றத்திற்காக சிறை சென்ற வெண்பா தற்போது ஜாமீனில் வெளி வந்துள்ளார். இதனால் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதற்கு ஏற்றாபோல், வெண்பாவு் பாரதி கண்ணம்மாவை சும்மா விட மாட்டேன் என்று சபதம் எடுத்து கண்ணம்மா பாரதி இருவரையும் தனித்தனியாக சந்தித்து தனது என்ட்ரியை அறிவித்துள்ளார்.
ஆனால் பாரதி வெண்பாவை பார்த்து கோபப்படுகிறார். இதனால் அடுத்து இவர் முழு உண்மையை தெரிந்துகொள்வாரா கண்ணம்மாவின் அடுத்த மூவ் என்ன? வெண்பாவின் அடுத்த சூழ்ச்சி என்ன என்பது குறித்து அடுக்கடுக்காக எதிர்பார்புகள் வர தொடங்கியுள்ளது. இதற்கிடையே நேற்றைய எபிசோட்டில், பாரதி கண்ணம்மா இருவருக்கும் திருமண நாளை முன்னிட்டு புடவை எடுக்கும் காட்சிகள் அரங்கேறியது.
அதன்பிறகு பாரதியை மருத்துவமனையில் சந்திக்கும் வெண்பா அவனின் கோபத்திற்கு ஆளாகி அடி வாங்கிக்கொண்டு சென்றுவிடுகிறார். தொடர்ந்து இன்றைய எபிசோட்டில், ஒரு சாமியார் பாரதியை சந்தித்து சில போதனைகளை கொடுக்கிறார். இதை கேட்டு கன்பியூஷனில் இருக்கும் பாரதி அடுத்து என்ன செய்யபோகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இப்போ சாமியார்தான் ட்ரெண்டு அதான் இயக்குநர் இப்படி ஒரு சீன் வச்சிருக்காரு என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் எப்படியோ உண்மை தெரியவந்தால் சரிதான் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் உண்மையை சீக்கிரம் உணர்த்துங்க என்றே கூறியுள்ளனர்.
என்னதான் பாரதி கண்ணம்மாவின் வீட்டில் இருந்தாலும் அவலுடன் பேசி பழகும்போது அவர் தப்பு செய்திருப்பாளா என்று ஒருமுறை கூட யோசிக்கும்படியான காட்சிகள் வந்த மாதிரி தெரியவில்லை. மாறாக ஒவ்வொரு காட்சியிலும் பாரதி கண்ணம்மா மீது வெறுப்பை உமிழ்வது போலவே அமைந்துள்ளர். காதலித்து திருமணம் செய்துகொண்ட உலகம் அறியாத பெண் எப்படி தவறு செய்வாள் என்று பாரதி ஏன் யோசிக்க கூடாது.. அப்படி யோசித்தால் சீக்கிரம் சீரியல் முடிந்துவிடுமா டைரக்டர் சார்?
எப்படி ஆனாலும் இன்றைய எபிசோட்டில் இந்த சாமியாரின் காட்சியை வைத்தாவது பாரதி சற்று யோசிப்பாரா அல்லது இயக்குநர் பாரதி கேரக்டரை இன்னும் யோசிக்க தெரியாத ஒருவராக காட்ட போகிறாரா என்பது அவருக்கே வெளிச்சம். எப்படி காட்சிகள் அமைத்தாலும் நாங்கள் பார்ப்போம் என்று பாரதி கண்ணம்மா சீரியலுககு ஒரு ரசிகர்கள் கூட்டம் சுற்றிக்கொண்டிருககிறது. அவர்களுக்கு இந்த காட்சிகள் திருப்தி தரும் என்று நம்பலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil