க்ளைமேக்ஸை நெருங்கிவிட்டதா பாரதி கண்ணம்மா? இறுதிக்கட்ட படப்பிடிப்பு வீடியோ

இந்த சீரியல் விரைவில் முடித்து வைங்கப்பா கடுப்பா இருக்கு என்று ரசிகர்களை புலம்ப வைத்த பெருமை பாரதி கண்ணம்மாவுக்கு உண்டு.

க்ளைமேக்ஸை நெருங்கிவிட்டதா பாரதி கண்ணம்மா? இறுதிக்கட்ட படப்பிடிப்பு வீடியோ

சின்னத்திரையின் பாரதி கண்ணம்மா சீரியல் கடந்த சில தினங்களாக பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் சீரியல் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்து.

சின்னத்திரையில் பல சீரியல்கள் மக்கள் மனதை கவர்ந்தாலும, சில சீரியல்கள் எப்போது முடியும் என்ற எண்ணத்தை கொடுத்துவிடும். அந்த வகையில் இந்த சீரியல் விரைவில் முடித்து வைங்கப்பா கடுப்பா இருக்கு என்று ரசிகர்களை புலம்ப வைத்த பெருமை பாரதி கண்ணம்மாவுக்கு உண்டு. தொடக்கத்தில் நல்ல வரவேற்பை பெற்ற பாரதி கண்ணம்மா தற்போது இழுவையின் உச்சமாக சென்றுகொண்டிருக்கிறது.

ஒரு டி.என்.ஏ. டெஸ்ட் எடுத்தால் கதையே முடிந்துவிடும் ஆனால் அதை செய்யாமல் இப்படி ஜவ்வு மாதிரி இழுத்துக்கொண்டு போறீங்களே டைரக்டர் சார் என்று இந்த சீரியலின் தீவிர ரசிகர்களை புலம்ப தொடங்கினார்.இதனால் சீரியலை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் சமீபத்தில் ஹேமா லட்சுமி இருவருக்கும் டி.என்.ஏ. டெஸ்ட் எடுத்த பாரதி அதன் ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறார்.

ஆனால் ஹாஸ்பிடலில் மிஷன் கோளாறு காரணமாக ரிசல்ட் வர தாமதமாகி வருகிறது. இதற்கிடையே பாரதி வெண்பாவுக்கு தாலி கட்டபோய் அதை கண்ணம்மா மற்றும் பாரதி குடும்பத்தினர் தடுத்து நிறுத்த, தனது அம்மா கண்ணம்மாதான் என்று ஹேமாவுககு தெரிய வர பல அதிரடி ட்விஸ்டகள் அரங்கேறியது. இதனிடையே தற்போது டி.என்.ஏ. டெஸ்ட் ரிசல்ட்டுக்காக டெல்லி வரை செல்ல பாரதி முடிவு செய்துவிட்டார்

இதனிடையே வெண்பாவை வழியில் பார்க்கும் ஹேமா அவளை கல்லால் அடித்துவிட தனது அடியாட்களை வைத்து ஹேமாவை கடத்தி விடுகிறாள் வெண்பா. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்று பரபரப்பாக சென்றுகொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டி.என்.ஏ. டெஸ்ட் ரிசல்ட்டுக்காக செல்லும் பாரதிக்கு உண்மை தெரிந்துவிடுகிறது. அதன்பிறகு சீரியல் இறுதிக்கட்டத்திற்கு வருவதுபோல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சமீபத்தில் இந்த சீரியலின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்தாகவும் ஒரு வீடியோ பதிவு வெளியாகியுள்ளது. இதன் மூலம் பாரதி கண்ணம்மா சீரில் எண்ட்க்கு வந்துவிட்டது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial bharthi kannamma climax shooting video update

Exit mobile version