கடந்த 2017-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற ஜூலி தமிழகத்தில் பெரும் மக்களிடம் பெரும் கவனம் ஈர்த்தார். அதற்கு முன் சமூக வலைதளங்களின் மூலம் பரவலாக அறியப்பட்ட அவர், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பெரும் புகழ்ச்சி பெற்றார். தொடர்ந்து இந்த போராட்டம் முடிவுக்கு வந்த பின், சமூக வலைதளங்களில் இந்த போராட்டம் குறித்து ரசிகர்கள் அவரிடம் பல கேள்விகளை எழுப்பினர்.
மேலும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்ட ஜூலிக்கு திடீர் அதிஷ்டமாக அந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற பிக்பாஷ் சீசன் 1-ல் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அந்த நிகழ்ச்சியில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அந்த வகையில், விமல் நடிப்பில், வெளியான மன்னர் வகையாறா மற்றும் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் நான் சிரித்தால் ஆகிய படங்களில் சிறப்புத் தோற்றங்களில் நடித்தார்.
எப்போதும் தன்னைத்தானே புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடும் ஆர்வம் கொண்ட ஜூலி வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பது வழக்கம். அந்த வகையில் கடந்த சில மாதங்களாக ஜூலி வலைதளங்களில் பதிவிடும் புகைப்படங்கள் நேர்மையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதில் கடந்த ஆண்டு நவம்பரில் ஜூலி ஒரு கடற்கரை போட்டோ ஷூட்டில் பங்கேற்றபோது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அந்த போட்டோவில், அவரது உடல் முழுவதும் மணலில் புதைந்து கிடந்து முகம் மட்டுமே வெளியில் தெரிந்தது.
இந்த புகைபடத்திற்கு கடும் விமர்சனம் எழுந்த நிலையில், வரவிருக்கும் திரைப்படத்திற்காக இந்த போட்டோ ஷூட் நடத்தப்பட்டதாக ஜூலி விளக்கமளித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த படம் குறித்த விளம்பரங்களும் டிரெய்லரும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டன. மேலும் பிக்பாஷ் தமிழ் சீசன் 2 இல் கலந்துகொண்ட ஐஸ்வர்யா தத்தாவுடன் பொல்லதா உலகில் பயங்கரா கேம் (பி.யூ.பி.ஜி) என்ற படத்திலும் அவர் நடித்துள்ளார். இதில் உத்தமி மற்றும் பெயரிடப்பட்டாத படம் ஒன்றிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது ஜூலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், அவர் தனது நண்பர் ஒருவரை அவரது கன்னத்தில் முத்தமிட முயற்சிக்கிறார். ஆனால் இறுதியில் பார்வையாளர்களை ட்ரோல் செய்கிறது. இந்த வீடியோவின் முடிவில், ஜூலி மற்றும் அவரது நண்பர் இருவரும் பலமாக சிரிக்கின்றனர். இந்த இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அந்த நண்பர் யார், கேட்கிறார்கள். மேலும் வீடியோவில் அவருடன் இருக்கும் நபர் அவரது நண்பரா அல்லது காதலரா என்று ஜூலியைக் கேட்டு பலர் வீடியோவின் கீழ் கேள்விகளை வெளியிட்டுள்ளனர்.
பிக் பாஸ் ஜூலியின் முத்தமிடும் வீடியோ:
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"