ரியல் லைஃப்பில் இணைந்த சின்னத்திரை ரீல் ஜோடிகள்! - படங்கள் உள்ளே
Tamil Serials: தீபாவளிக்கு வெளியான, ’பிகில்’ திரைப்படத்தில் விஜய்யின் அக்காவாக தேவதர்ஷினியும், ’கைதி’ படத்தில் மருத்துவராக சேத்தனும் நடித்திருந்தார்கள்.
Tamil Serials: தீபாவளிக்கு வெளியான, ’பிகில்’ திரைப்படத்தில் விஜய்யின் அக்காவாக தேவதர்ஷினியும், ’கைதி’ படத்தில் மருத்துவராக சேத்தனும் நடித்திருந்தார்கள்.
Tamil Serial Celebrities : தமிழ் சினிமாவிலும், சீரியலிலும் உடன் நடித்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது என்பது புதிதல்ல. அந்த வகையில் சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து, பின் நாட்களில் ரியல் ஜோடிகளான சின்னத்திரை பிரபலங்களின் படத்தொகுப்பைப் இங்கே பதிவிடுகிறோம்.
Advertisment
சேத்தன் - தேவதர்ஷினி தங்கள் மகள் நியாதியுடன்...
’மர்ம தேசம்’ சீரியலில் தான் சேத்தனும், தேவதர்ஷினியும் முதன் முதலாக இணைந்து நடித்தார்கள். அதன் பிறகு, ‘ருத்ர வீணை’, ‘அத்திப்பூக்கள்’ என பல்வேறு தொடர்களில் நடித்து மக்கள் மனதில் தங்களுக்கென ஓரிடத்தை நிரந்தரமாகப் பிடித்திருக்கிறார்கள். தற்போது சேத்தனும், தேவதர்ஷினியும் வெள்ளித்திரையில் பிஸியாக இருக்கிறார்கள். தீபாவளிக்கு வெளியான, ’பிகில்’ திரைப்படத்தில் விஜய்யின் அக்காவாக தேவதர்ஷினியும், ’கைதி’ படத்தில் மருத்துவராக சேத்தனும் நடித்திருந்தார்கள். இவர்களின் மகள் நியாதி, ‘96’ திரைப்படத்தில் சின்ன வயது தேவதர்ஷினியாக அறிமுகமானார்.
ஸ்ரீகுமார் - ஷமிதா
Advertisment
Advertisements
இசையமைப்பாளர் சங்கர் கணேஷின் மகனான ஸ்ரீகுமார், 30-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார். இயக்குநர் சேரனின் பாண்டவர் பூமி திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக அறிமுகமான ஷமிதா, சினிமா வாய்ப்புகள் சரியாக அமையாததால் சீரியலுக்கு வந்தார். ஸ்ரீயும், ஷமிதாவும் திருமணம் செய்து, 2 அழகான பெண் குழந்தைகளுக்கு பெற்றோர்களாகியுள்ளனர்.
சஞ்சீவ் - ப்ரீத்தி
நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பராக அறியப்படும் சஞ்சீவ், சினிமாவில் நடத்ததுடன் சீரியல்களிலும் நடிக்கத் தொடங்கினார். சப்போர்ட்டிங் ரோல், நெகட்டிவ் ரோல் என மாறி மாறி கிடைத்த கதாபாத்திரங்களை சிறப்புடன் செய்யத் தொடங்கினார். அவரை ‘திருமதி செல்வம்’ சீரியல் நிரந்தர சின்னத்திரை நாயகனாக்கியது. சீரியலில் நடித்து வந்த ப்ரீத்தியை மணந்த சஞ்சீவுக்கு லயா, ஆதவ் என இரு குழந்தைகள் உள்ளனர்.
போஸ் வெங்கட், சோனியா
ஆட்டோ ஓட்டிக் கொண்டு, நடிப்பு சான்ஸ் கேட்டு திரிந்த போஸ் வெங்கட்டிற்கு, பல நாள் போராட்டங்களுக்குப் பிறகு ‘மெட்டி ஒலி’ சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிறப்பாக நடித்து அப்ளாஸ் வாங்கவே, சீரியல் வாய்ப்புகளும், சினிமா வாய்ப்புகளும் போஸ் வீட்டு கதவை தட்ட ஆரம்பித்தன. தற்போது சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் அவர், சோனியாவை திருமணம் செய்துக் கொண்டுள்ளார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சோனியா, பல படங்களிலும், சீரியல்களிலும் நடித்துள்ளார். இவர்களுக்கு பவதாரிணி, தேஜஸ்வின் என இரு குழந்தைகள் உள்ளனர்.
ஷ்யாம் கணேஷ் - சிந்து
சின்னத்திரையில் பல தொடர்களில் நடித்துள்ள ஷ்யாம் கணேஷின் மனைவி சிந்து, ’ஆனந்தம்’, ’புகுந்த வீடு’, ‘பகல் நிலவு’, ‘தெய்வ மகள்’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.