Advertisment

முடிவுக்கு வரும் விஜய் டி.வி முக்கிய சீரியல்: க்ளைமேக்ஸ் படப்பிடிப்பு போட்டோக்கள் வைரல்!

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருக்கும் ஒரு சீரியல் விரைவில் முடிய உள்ள நிலையில், க்ளைமேக்ஸ் கட்சி படப்பிடிப்பில் எடுத்து புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Chellamma

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இல்லத்தரசிகளின் முக்கிய பொழுதுபோககு அம்சமாகவுமு் மாறியுள்ளது.  இதன் காரணமாக அவ்வப்போது புதிய சீரியல்கள் ஒளிபரப்பாவதும், பழைய சீரியல்கள் முடிவுக்கு வருவதும் தொடர்ந்து வருகிறது.

Advertisment

அந்த வகையில் தற்போது விஜய் டிவியின் மக்கிய சீரியல்களில் ஒன்றாக செல்லம்மா சீரியல் முடிவுக்கு வர உள்ளது.  அக்ஷதா அக்பர்ஷா நாயகியாக நடித்து வரும் இந்த சீரியலில் அர்னவ் நாயகனாக நடித்து வருகிறார்.  கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் தொடங்கிய இந்த சீரியல், 500-க்கு அதிகமான எபிசோடுகளை கடந்துள்ளது.

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளது. இந்த சீரியலின் க்ளைமேக்ஸ் கட்சி படமாக்கும்போது வெளியாக புகைப்படங்கள் இணையத்தில வைரலாகி வருகிறது. ஒரு குழந்தைக்கு அம்மாவான நாயகிக்கும் திருமணம் ஆகாத நாயகனுக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்யமாக சம்பவங்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்றிருந்துது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment