சித்தி -2 சீரியலில் முக்கிய மாற்றம்... புதிதாக இணைந்த விஜய் டிவி நடிகை

Tamil Serial Update : சன்வியின் ஹிட் சீரியலான சித்தி 2 சீரியலில் சுப்புலட்சுமிகதாப்பாத்திரம் மாற்றப்பட்டுள்ளது.

Tamil Serial Update : சன்வியின் ஹிட் சீரியலான சித்தி 2 சீரியலில் சுப்புலட்சுமிகதாப்பாத்திரம் மாற்றப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
சித்தி -2 சீரியலில் முக்கிய மாற்றம்... புதிதாக இணைந்த விஜய் டிவி நடிகை

Tamil Serial Chithi 2 Character Change Update : 80 – 90 களில் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் ராதிகா.90-களின் இறுதிக்கட்டத்தில் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்த இவர், பல ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார். இதில் இவர் நடிப்பில் ஒளிபரப்பான சித்தி சீரியல் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 90- கிட்ஸ்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தள்ள இந்த சீரியல் கொரோனா ஊரடங்கு காலத்தில் மறுஒளிபரபரப்பு செய்யப்பட்டது.

Advertisment

இந்நிலையில், 22 வருடங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு இந்த சீரியலின் இரண்டாம் பாகமாக சித்தி 2 ஒளிபரப்பாகி வருகிறது. ப்ரீத்தி சர்மா, நந்தன் லோகநாதன் ஆகியார் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் இந்த சீரியலில், ராதிகா சாரதா என்ற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென ராதிகா தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதன்பிறகு ராதிகா கதாப்பத்திரத்திற்கு வேறு யாரும் அறிவிக்கப்படவில்லை.

ஆனால் இந்த சீரியல் தொடங்கியதில் இருந்து அவ்வப்போது நடிகர்கள் நடிகைகள் மாற்றம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த சீரியலில் நடித்து வந்த பொன்வண்ணன், நிழல்கள் ரவி உள்ளிட்ட சில நடிகர்கள் விலகிய நிலையில், சமீபத்தில் ராதிகாவும் விலகினார். அதனைத் தொடர்ந்து தற்போது சுப்புலட்சுமி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த வீனா வெங்கடேஷ் மாற்றப்பட்டுள்ளார்.

Advertisment
Advertisements

அவருக்கு பதிலாக சுப்புலட்சுமி கதாபாத்திரத்திற்கு உஷா எலிசபெத் சுராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவெ விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடரின் 2-வது சீசனில் நடித்திருந்தார். இது தொடர்பாக நாயகி ப்ரீத்தி சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம வைரலாகி வருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chithi 2 Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: