சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி-2 சீரியல் வெற்றிகரமாக 300 எபிசோடுகளை கடந்துள்ள நிலையில், அந்த சீரியல் நட்சத்திரங்கள் பலரும் சமூகவலைதளங்களில் இந்த தகவலை பகிர்ந்து வருகின்றனர்.
Advertisment
90களின் இறுதியில் சன்டிவில் ஒளிபரப்பாகி மெகாஹிட் அடித்த சீரியல் சித்தி. ராதிகா சரத்குமார், சிவக்குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த சீரியில் 90-கிட்ஸ்களுக்கு பிடித்தமான சீரியலாகவும் அமைந்தது. இல்லத்தரசிகளிடமும் நல்ல வரவேற்பை பெற்ற இந்த சீரியல் கடந்த 2001-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
தொடர்ந்து இந்த சீரியலில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகை ராதிகா சரத்குமார் அதன்பிறகு பல சீரியல்களில் நடித்து வந்த நிலையில், 19 வருடங்களுக்கு பிறகு சித்தி சீரியலின் 2-ம் பாகத்தை தனது ரேடான் தயாரிப்பு நிறுவனம் மூலம் தொடங்கினார். ப்ரீத்தி சர்மா, நந்தன், நிழல்கள் ரவி, பொன்வன்னண், கோமதி நாயகம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மனதில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இதற்கிடையே இந்த சீரியலில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ராதிகா சரத்குமார் திடீரென சீரியலை விட்டு விலகினார். கணவருடன் சேர்ர்ந்து அரசியலில் ஈடுபடபோவதாக அறிவித்து தனது விலகலுக்கான காணத்தையும் தெரிவித்திருந்தார். ராதிகா சரத்குமார் வெளியேறினாலும் மக்கள் மத்தியில் சித்தி 2 சீரியலுக்கு வரவேற்பு குறையமால் இருந்து வருகிறது.
இந்த வரவேற்பை தற்போது சித்தி 2 வெற்றிகரமான 300-வது எபிசோடை கடந்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 27-ந் தேதி முதல் ஒளிபரப்பான இந்த சீரியல் இடையில் கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு மீண்டும் தொடங்கிய இந்த சீரியல் தற்போது வெற்றிடை போட்டு வருகிறது. சீரியல் 300-வது எபிசோடு கடந்ததை அந்த சீரியல் நட்சத்திரங்கள் பலரும் தங்களது சாக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
சித்தி 2 - இன்று 300 வது எபிசோடு! தொடர் தொடங்கியது முதல் இன்று வரை ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் சித்தி 2 குடும்பத்தின் மனமார்ந்த நன்றி!
தர்ஷ்ணா ஸ்ரீபால் கோலேச்சா, மீரா கிருஷ்ணா மற்றும் பலர் அந்தந்த சமூக ஊடகங்களில், ரசிகர்களுக்கு அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் சீரியல் நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவரும் இந்த சீரியல் ஒரு மைல்கல்லைக் நடதுள்ளதாக உற்சாகமாக உள்ளனர்.
இது குறித்து தர்ஷ்ணா ஸ்ரீபால் கோலேச்சா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “சித்தி 2 சீரியல் 300 எபிசோடுகளை கடந்த கொண்டாப்படுகிறது. இந்த சீரிய்யீல் பணியாற்றி வரும், தயாரிப்புக் குழு, எனது சக நடிகர்கள, தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. பார்வையாளர்கள் மற்றும் ரசிகர் உங்கள் முழு ஆதரவையும் அன்பையும் வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மீண்டும் நன்றி மற்றும் உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து மீரா கிருஷ்ணா தனது பதிவில்,, “சித்தி 2 வெற்றிகரமாக 300 எபிசோடுகளை நிறைவு செய்கிறது எங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. சுவாரஸ்யமான கதைக்களத்திலிருந்து வலுவான நடிகர்கள் வரை பல காரணங்களுக்காக இந்த சீரியல் பிரபலமடைந்து வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.