scorecardresearch

3 சீசனை கடந்த அம்மன் சீரியலுக்கு விரைவில் என்ட் கார்டு? ரசிகர்கள் சோகம்

Tamil Serial Update : கலர்ஸ் தமிழின் ஹிட் சீரியல்களில் ஒன்றாக அம்மன் சீரியல் தற்போது 1100 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமான ஓடிக்கொண்டிருக்கிறது.

3 சீசனை கடந்த அம்மன் சீரியலுக்கு விரைவில் என்ட் கார்டு? ரசிகர்கள் சோகம்

Tamil Serial Amman Update : தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு முக்கியத்துவம் தரும் சேனல்களில் கலர்ஸ் தமிழும் ஒன்று. முன்னணி சேனல்களுக்கு போட்டியாக பல சுவாரஸ்யமான சீரியல்மற்றும் ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி குறுக்கிய காலத்தில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பெற்றுள்ளது.

சில்லுனு ஒரு காதல், வள்ளி திருமணம், இதயத்தை திருடாதே, அபி டெய்லர் உள்ளிட்ட பல ஹிட் சீரியல்களை ஒளிபரப்பிய கலர்ஸ தமிழில் பக்தி தொடராக வந்தது அம்மன். பவித்ரா கௌடா நாயகியாக அறிமுகமான இந்த தொடரில், அமல்ஜித் நாயகனாக நடித்து வருகிறார். மேலும் சுபா ரக்ஷா ஆனந்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர்.

கலர்ஸ் தமிழின் ஹிட் சீரியல்களில் ஒன்றாக அம்மன் சீரியல் தற்போது 1100 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமான ஓடிக்கொண்டிருக்கிறது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் தமிழில் ஒளிபரப்பாகி வரும் ஒரே பக்தி தொடர் அம்மான் சீரியல் தான். 3 சீசன்களை கடந்துள்ள இந்த சீரியல் தற்போது முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல திருப்பங்களுடன் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வந்த அம்மன் சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial colors tamil amman serial end very soon update

Best of Express