கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாக வரும் திகில் சீரியலாள மோகினி ஆட்டம் சீரியலில், மகா அசுரனின் சூனியம் கலந்த ஆப்பிளை சாப்பிட்டதால், மோகனின் உடல் சூடேறி உயிருக்கு போராடும் நிலையில் உள்ளது. இதைப் பார்த்து தாங்க முடியாத நிஷாந்தி, தனது உயிரைப் பொருட்படுத்தாமல் மந்திர சக்தியால் மோகனை குணப்படுத்த உதவுகிறாள். ஆனால், நிஷாந்தியின் உதவியை அறிந்த மோகன், எரிச்சலுடன் அவளது செயல்களை ஒப்புக்கொள்ள மறுக்கிறான்
மறுபுறம், கோபத்தில் மகா அசுரனை நிஷாந்தி எதிர்கொள்கிறாள் மகா அசுரன், அவளை மந்திர சாம்ராஜ்யத்திற்கு அனுப்பி விடுகிறார். விஷ்வன், நிஷாந்தியை மீட்க மோகனின் உதவியை நாட, மோகன், வேறு வழியின்றி, அவனின் கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறான். மந்திர சாம்ராஜ்யத்தில், நிஷாந்தி மலர் புதர்களால் பிணைக்கப்பட்டு, உதவிக்காக காத்திருக்கிறாள். அவள் குரலைக் கேட்டு மோகன் அவளைக் கண்டுபிடிக்கிறான். அனால் அவர்கள் அறியாது ஓர் மர்ம உருவம் ஒன்று அவர்களை நோட்டமிட்டு கொண்டிருக்கிறது.
அந்த மந்திர சாம்ராஜ்யத்தில், மந்திரச் சூழலையும் மஹா அசுரனின் சதியையும் எதிர்கொண்டு, நிஷாந்தியை மீட்டு, மோகனும் நிஷாந்தியும் தப்பிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“