டிவி சீரியலில் பேராசிரியர் ஞானசம்பந்தன்: செம்ம லவ் ஸ்டோரியா இருக்கும்போல!

Serial News In Tamil : வழக்கமாக குடும்ப கதையுடன் இளைஞர்களை கவரும் வகையில் காதல் கதையாக இருக்கும் என்பது இந்த ப்ரமோவின் மூலம் தெளிவாக தெரியவந்துள்ளது

Colors Tamil New Serial Update : சின்னத்திரையில் ரசிகர்களின் ரசனைக்கேற்ப சீரியல்கள் பல அதிரடி திருப்பங்களுடன் அரங்கேறி வருகின்றனர். ஏற்கனவே ஒளிபரப்பாகும் சீரியல்கள் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்றாலும் புதிய சீரியல்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது தொடர்கிறது. அந்த வகையில், வரும் அக்டோபர் 18 முதல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ‘எங்க வீட்டு மீனாட்சி’ என்ற தொடர் ஒளிபரப்பாக உள்ளது.  

கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்த சீரியல் குறித்த ப்ரமோ வெளியிடப்பட்டது. வழக்கமாக குடும்ப கதையுடன் இளைஞர்களை கவரும் வகையில் காதல் கதையாக இருக்கும் என்பது இந்த ப்ரமோவின் மூலம் தெளிவாக தெரியவந்துள்ளது. இந்த சீரியலின் முதல் இரு புரொமோ மக்கள் மத்தியில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதன் சிறப்பான கதை மற்றும் சித்தரிப்பை பார்வையாளர்கள் காண்பதற்காக ஒரு முன்னோட்டத்தை கலர்ஸ் தமிழ்  வழங்கியிருக்கிறது.

மேலும் இந்த சீரியல் வரும்  அக்டோபர் 18ம் முதல் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல பேச்சாளரும், நடிகருமான ஞானசம்பந்தம், இந்த சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அழகான நகரமான காரைக்குடியை பின்புலமாகக் கொண்டிருக்கும் இந்த சீரியலின் ப்ரமோவில், கல்லூரி யில் சந்திக்கிற ஒரு அழகான பேராசிரியையான மீனாட்சி (ஸ்ரீதா சிவதாஸ்) மற்றும் ஒரு புதிய மாணவனான சிதம்பரம் (ஜீவா) என்ற இரு வேறுபட்ட குணாதிசயங்கள் கொண்ட கதாபாத்திரங்கள் கதையைச் சொல்கிறது.

மீனாட்சி மற்றும் சிதம்பரம் ஆகிய இருவருக்கும் இடையே நடக்கும் மோதல் மற்றும் காதல் ஆகிய இரண்டும் இந்த இந்த ப்ரமோவில் வெளியிடப்பட்டுள்ளது. பார்வையாளர்களை மிகப்பெரிய அளவில் இது கவர்ந்திழுக்கும் என்பதை இந்த ப்ரமோ வலுவாக சுட்டிக்காட்டுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial colors tamil new serial enga veetu meenatchi update

Next Story
கன்டென்ட் முக்கியமா? சைலன்ட்டா ஜெயிக்கணுமா? – பிக் பாஸ் போட்டியாளர்கள் என்ன செய்கிறார்கள்?Bigg Boss Tamil 5 Contestants Character People thoughts Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X