Tamil Serial Amman Actress Chandrika : கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒளிபரப்பாகும் பக்தி தொடர் அம்மன். பவித்ரா கௌடா, அமல்ஜித், நந்திதா ஜெனிஃபர் ஆகியோர் நடித்து வரும் இந்த தொடர் மக்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது 400 எபிசோடுகளை நெருங்கி வரும் இந்த தொடரில் புதிய திருப்பமாக ஒரு புது நடிகை இந்த தொடரில் இணைந்துள்ளார்.
பிரபல மாடல் மற்றும் நடிகை சந்திரிக்கா தான் அந்த புது நடிகை. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ள நடிகை சந்திரிக்கா, அனைவருக்கும் வணக்கம். நான் இப்போது அம்மன் சீரியலில் மந்த்ரா என்ற ரோலில் நடிக்க தொடங்கி இருக்கிறேன். அது எனக்கு மிகவும் சவாலான ரோல். அது என்னுடைய பேவரைட் ரோலும் கூட. திங்கட்கிழமை முதல் சனி வரை மாலை 7.30 முதல் 8.30 வரை ஒளிபரப்பாகும் அம்மன் சீரியலை தவறாமல் பாருங்கள்.
இந்த சீரியல் உங்களுக்கு அது பிடிக்கும் என நம்புகிறேன். நீங்கள் இதுவரை எனக்கு அளித்த ஆதரவுவை நான் மதிக்கிறேன். தொடர்ந்து ஆதரவு தாருங்கள்என தெரிவித்துள்ளார். அம்மன் சீரியலில் மந்த்ரா கதாபாத்திரம் முக்கிய வில்லி என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram