/tamil-ie/media/media_files/uploads/2021/09/Alya-sanjeev.jpg)
Serial Couple Alya Sanjeev Video : விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் அறிமுகமானவர் ஆல்யா மானசா. அந்த சீரியில் நடித்துக்கொண்டிருக்கும்போதே நாயகன் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்களுக்கு ஐலா என்ற மகள் உள்ள நிலையில், கணவன் மனைவி இருவரும் தொடர்ந்து சீரியலில் நடித்து வருகின்றனர். ஆல்யா விஜய் டிவியின் ராஜா ராணி சீசன் 2 சீரியலில் நடித்து வருகிறார்.
சஞ்சீவ் தற்போது சன்வியில் ஒளிபரப்பாக உள்ள கயல் சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார். இருவரும் சின்னத்திரையில் பிஸியாக நடித்து வந்தாலும் சமூக வலைதளங்களில் எப்போது ஆக்டீவாக இருந்து வருகின்றனர். வலைதளங்களில் அதிக ரசிகர்களை பெற்றுள்ள இவர்கள் அவ்வப்போது தங்கள் குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் இவர்கள் இருவரும் பிரிட்ச் டூர் சென்றது, புதிய கார் வாங்கியது என ஒரு சில வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியது. இந்நிலையில தற்போது, இருவரும் நடனமாடிய அழகிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில வைராகி வருகிறது. இந்த வீடியோவில் ஆல்யா தனியான நடனமாடிக்கொண்டிருக்கும்போது, சஞ்சீவ் வீடியோவின் நடுவே வந்து செல்கிறார். இதனால் கடுப்பாகும் ஆல்யா கோபத்துடன் நிற்க, இதை பார்க்கும் சஞ்சீவ் அவருக்கும் முத்தம் கொடுத்து சமாதானப்படுத்துகிறார்.
தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.