scorecardresearch

ஹேப்பி நியூஸ்… இந்த மாதம் ஆல்யா மானசா- அய்லா டபுள் கொண்டாட்டம்!

Tamil Serial Update : விழாவுக்காக நெருங்கிய நண்பர்கள் மற்றும் சக நடிகர்கள் பலருக்கு சஞ்சீவ் அழைப்பு விடுத்து வருகிறார்.

ஹேப்பி நியூஸ்… இந்த மாதம் ஆல்யா மானசா- அய்லா டபுள் கொண்டாட்டம்!

Alya Manasa Sanjeev Update : சமீப காலமாக சின்னதிரையில் ஜோடியாக நடித்து வரும் பல ரியல் ஜோடிகள் தங்கள் நிஜ வாழ்விலும் இணைந்து வருகின்றனர். ஆனால் இதற்கு முதல் அடித்தளம் அமைத்தது என்றால் ஆல்யா மானசா – சஞ்சீவ் ஜோடியை சொல்லலாம். விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலம் அறிமுகமான இவர்கள் இருவரும் அந்த சீரியலின் அடையாளமாகவே மாறிவிட்டனர்.

ரீல் காதலர்களாக சீரியலில் சேர்ந்த இவர்கள், காலப்போக்கில் ரியல் ஜோடிகளாக மாறி திருமணம் செய்துகொண்டனர். இவர்களின் அன்பை போற்றும் விதமான இந்த தம்பதிக்கு தற்போது ஐலா என்ற பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பின்னும் பல ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள இந்த ஜோடி தொடர்ந்து சீரியலில் நடித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஆல்யா மானசா விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியலிலும், சஞ்சீவ் சன்டிவியின் கயல் சீரியலிலும் நடித்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் ஆல்யா மானசா இரண்டாவது முறையாக கர்பபமானார். இதனால் அவர் ராஜா ராணி சீரியலை விட்டு விலகிவிடுவார் என்று வதந்திகள் பரவி வந்த நிலையில், அதை பொய்யாக்கும் விதமாக தற்போது ஆல்யா தொடர்ந்து சீரியலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஆல்யாவுக்கு 2-வது டெலிவரி நாள் மார்ச் 24-ந் தேதி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல மார்ச் 20-ந் தேதி இவர்களின் முதல் குழந்தை ஐலாவுக்கு பிறந்தநாள் என்பதால், ஆல்யாவின் 9-வது மாத வளைகாப்பு மற்றும் அய்லாவின் பிறந்தநாள் இரண்டையும் ஒன்றாக செலபிரேட் செய்வதற்காக சஞ்சீவ் தயாராகி வருகிறார். இதற்காக நெருங்கிய நண்பர்கள் மற்றும் சக நடிகர்கள் பலருக்கு சஞ்சீவ் அழைப்பு விடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial couple alya sanjeevi double celebration update