Tamil Serial Couple Aryan – Shabana Update : நாம எல்லோருமே சில வலிகளை அனுபவிச்சுதான் வந்திருப்போம். பலருக்கு பலவிதமான பிரச்னை இருக்கு. சிலர் பிரியமான ஒருத்தரை இழந்திருக்கலாம்!” – ஷபானா
சமீப மாதங்களாக சீரியல் நடிகர் நடிகைகள் பலரும் தன்னுடன் நடித்த அல்லது மற்ற சீரியலில் நடித்து வரும் நடிகர் நடிகைகளை திருமணம் செய்துகொள்ளும் நிகழ்வு நடைபெற்று வருகிறது இந்த நிகழ்வை சமீபத்தில் முதலில தொடங்கிய பெருமை ஆர்யன் – ஷாபனா தம்பதியே சேரும். விஜய் டிவியின் பாக்யலட்சுமி சீரியலில் செழியன் என்ற கேரக்டரில் நடித்து வரும் ஆர்யன், ஜீ தமிழின் செம்பதிருத்தி சீரியலில் பார்வதி கேரக்டரில் நடித்து வரும் ஷாபனா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
சமூகவலைதளங்களில் தங்களது காதலை வெளிப்படுத்திய இந்த தம்பதி திருமணம் செய்துகொள்ள சில ஆண்டுகள் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென கடந்த நவம்பர் முதல்வராத்தில் தங்கள் திருமமணம் செய்துகொண்டதாக அறிவித்தனர். இந்த திருமணத்தில் இருவீட்டார் கலந்துகொண்டனரா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருந்து வரும் நிலையில், இவர்கள் திருமணம் தொடர்பாக புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாக பரவியது.
இந்நிலையில், திருமணம் முடிந்து சில நாட்களுக்கு பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷாபானா வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாக பரவியது. அந்த பதிவில், நாம் எல்லோருமே சில வலிகளை அனுவிச்சுதான் வந்திருப்போம. பலருக்கும் பலவிதமான பிரச்னை இருக்கும். சிலர் பிரியமான ஒருத்தரை இழந்திருக்கலாம் என்று கூறியிருந்தார். இந்த பதிவை பார்த்த பலரும திருமணம் மடிந்த சில நாட்களிலேயே ஷாபனா ஏன் இந்த பதிவை வெளியிட்டுள்ளார் என்று கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக விகடன் பத்திரிக்கையில் வெளியான செய்தியின்படி,
ஷபானா ஆரியன் திருணத்தில் ஆர்யன் வீட்டாருக்கு சுத்தமாக விருப்பம் இல்லை. ஆனால் ஆர்யனுடன் நட்பில் இருந்த பூவே பூச்சூடவா சீரியலில் நடித்த நடிகை ரேஷ்மா தான் இந்த திருமணத்திற்கு முழு காரணம். அவரசம் அவசரமா திருமணத்தை முடித்தும் ஆர்யன் வீட்டில் திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் திருமணம் முடிந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் முடிந்தும் ஷபானா ஆர்யன் வீட்டிற்கு செல்லவில்லை.
இதற்கிடையே தேனிலவுக்காக 4 நாட்கள் பிளான் பண்ணி பாண்டிச்சேரி சென்ற ஷபானா ஆர்யன் இருவரும் சென்ற மறுநாளே திரும்பி வந்துவிட்டனர். அங்கு என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. இப்போ ரெண்டுபேருக்கும் இடையே மனக்கசப்பு அதிகரித்து வருவதாக தெரிகிறது. கூடிய விரைவில் இது வெளிப்படும்.
இதற்கிடையே ஆர்யன் வீட்டார், நாங்க ஆர்யனுக்கு ஒரு பொண்ணை பார்த்திருக்கிறோம். நீயா விலகிடு என்று சொல்ம் வகையில் ஷபானாவிடம் பேசியதாக சொல்கிறார்கள். மேலும் இந்த திருமணத்திற்கு ரேஷ்மாதான் காரணம் என்று தெரிந்து ஆர்யன் வீட்டார் ரேஷ்மாவின் வீட்டிற்கே சென்று சண்டை பிடித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது என்று குறிப்பட்டுள்ளனர். திருமணம் முடிந்து ஒரு மாதம் முழுவதாக முடியாத நிலையில், ஆர்யன் –ஷபானா குறித்து அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சயில் ஆழ்த்தியுள்ளது
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil