மாறி மாறி சேறு வீசும் விஜய் டி.வி சீரியல் ஜோடி: இதுவா காதல்? இதுவா கல்யாணம்?

உங்களுக்கு கோர்ட் என்ற ஒன்று இருப்பதே தெரியாதா என்று நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.

உங்களுக்கு கோர்ட் என்ற ஒன்று இருப்பதே தெரியாதா என்று நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Samyuktha Vishnu

விஜய் டிவி ஜோடி

நீ இல்லை என்றால் நான் இல்லை நீ இறந்துவிட்டால் நானும் இறந்துவிடுவேன் என்று சொல்வதும், காதலுக்காக உயிர் வாழ்வதும் உயிரை எடுப்பதும் சினிமாவில் மட்டும் தான் நடக்கும். நிஜ வாழ்க்கையில் ஒரு சில காதலர்கள் இன்னும் காதலுக்கு இலக்கனமாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களை மறக்கடிக்கும் அளவுக்கு இன்றைய காலக்கட்ட இளைஞர்களின் காதல் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது.

Advertisment

சமீப காலகமாக சின்னத்திரையில் ஒன்றாக இணைந்து நடித்து வரும் பல ரீல் ஜோடிகள் ரியல் ஜோடிகளாக மாறி தங்களது வாழக்கையில் தொடர்ந்து பயணித்து வருகின்றனர். இதில் ஒரு சில ஜோடி பிரிந்திருந்தாலும் அவர்கள் பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் பிரிந்து சென்று தங்களது வேலையை பார்த்து வருகின்றனர். ஆனால் இவர்களுக்கு விதிவிலக்காக தங்களது விவாகரத்தை பெரிய பரபரப்பை உண்டாக்கியுள்ளனர்.

விஜய் டிவியின் சிற்பிக்குள் முத்து என்ற சீரியல் மூலம் தங்களது காதலை வளர்த்த சம்யுக்தா விஷ்ணுகாந்த் ஜோடி கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்துகொண்ட நிலையில், 2 மாதங்களில் இருவரும் பிரிந்துவிட்டனர். தங்களது திருமண புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் இருந்து டெலிட் செய்த இவர்கள் இருவரும், மாறி மாறி குறை கூறி வருகின்றனர். இவர்களின் தனிப்பட்ட விஷயங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருவது நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விஷ்ணுகாந்த் தனது மனைவி குறித்து அடுக்கடுக்கான பல புகார்களை கூறிய நிலையில், அடுத்த நாள் அவரது புகார்களுக்கு விளக்கம் அளித்து புதிய வீடியோ வெளியிட்ட சம்யுக்தா தனது கணவர் விஷ்ணுகாந்த் குறித்து பல புகார்களை தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், உங்களுக்கு கோர்ட் என்ற ஒன்று இருப்பதே தெரியாதா என்று நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.

Advertisment
Advertisements

காதலித்து திருமணம் செய்துகொண்ட நீங்கள் திருமணமான 2 மாதங்களில் இப்படி மாறி மாறி குறை சொல்லி பிரிவது எந்த மாதிரியான காதல் என்பது தெரியவில்லை என்று கூறி வருகின்றனர். குடும்ப வாழக்கையில் சில முரன்பாடுகள் இருந்தாலும் அதை இப்படியா வெளியுலகத்திற்கு தெரியவது போல் காட்டிக்கொள்வது என்றும் சிலர் கூறி வரும் நிலையில், தனக்கு 22 வயது அவருக்கு 32 வயது அவரை விட 10 வயது இளைய பெண் என்று கூறி தனக்கான அனுதாபத்தை சம்பாதித்துக்கொள்கிறார் சம்யுக்தா.

ஆனால் இந்த வயது வித்தியாசம் இப்போதுதான் தெரிகிறதா, திருமணத்திற்கு முன்பு தெரியவில்லையா என்று கேட்டு வரும் நெட்டிசன்கள், உங்களது அந்தரங்க விஷயங்களை கூட பொதுவெளியில் பேசுவது என்ன மாதிரியான நாகரீகம் என்று கேட்டு வருகின்றனர். இருவரும் மாறி மாறி தங்களை குறை கூறி வருவதால், உண்மையிலேயே இவர்கள் காதலித்தார்களா என்ற கேள்வி எழுகிறது.   இப்படிப்பட்ட ஒரு திருமணம் அவசியமா?, இன்னும் என்னென்ன அந்தரங்க விஷயங்கள் வர போகிறதோ தெரியவில்லை

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: