/indian-express-tamil/media/media_files/ie620Ic7mh2FNj9JRVru.jpg)
சந்தியா ராமச்சந்திரன் - பிரிட்டோ மனோ
பிரபல சீரியல் நடிகை சந்தியா ராமச்சந்திரன் தனது கணவர் பிரிட்டோ மனோவுடன் காஷ்மீரில் விடுமுறை தினத்தை கொண்டாடி வரும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாடலிங் மூலம் தனது சின்னத்திரை வாழ்க்கையை தொடங்கிய சந்தியா ராமச்சந்திரன், மியூசிக் வீடியோக்கள் மற்றும் கிரியேட்டிவ் ப்ராஜெக்ட்டுகள் மூலம் பொழுதுபோக்குத் துறையில் இறங்கினார். அதனைத் தொடர்ந்து சின்னத்திரையில் 'கோகுலத்தில் விதை,' 'தெய்வம் தந்த பூவே,' 'சலூன்,' மற்றும் 'பேய காணோம்' போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.
கடைசியாக ஜீதமிழில் வெளியான 'தவமாய் தவமிருந்து' சீரியலில் தனது கணவர் பிரிட்டோவுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பிரிட்டோ – சந்தியா ஜோடிக்கு தனியாக ரசிகர்கள் பட்டாளமும் இருந்தது. 'அரசியல்ல இது எல்லாம் சாதாரனமப்பா' படத்தின் மூலம் அறிமுகமான பிரிட்டோ, சின்னதம்பி,' 'சரவணன் மீனாட்சி,' மற்றும் டான்ஸ் ரியாலிட்டி ஷோ 'டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 4. உள்ளிட்ட பல சின்னத்திரை ஷோக்களில் பங்கேற்றுள்ளர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரிட்டோ – சந்தியா ஜோடி திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்களின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது. இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து நடித்து வந்த தவமாய் தவமிருந்து சீரியல் சமீபத்தில் முடிவுக்கு வந்தது. இதனிடையே தற்போது விடுமுறை தினத்தை கழிப்பதற்காக பிரிட்டோ – சந்தியா தம்பதி காஷ்மீருக்கு சென்றுள்ளனர்.
அங்கு பனி படர்ந்த இடங்களில் இருந்து இவர்கள் எடுத்துக்கொண்ட போட்டோவை தங்களது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். தவமாய் தவமிருந்து சீரியல் மூலம் இவர்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் ஊருவாகியுள்ளதை தொடர்ந்து தற்போது இவர்கள் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது சந்தியா ராமச்சந்திரன் தெலுங்கு சீரியலில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us