New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/08/Sanjeev-alya.jpg)
Tamil Serial Update : சின்னத்திரையின் நட்சத்திர தம்பதியான சஞ்சீவ் ஆல்யா ஜோடி புதிதாக கார் வாங்கியுள்ளதாக தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
Serial Actress Alya Manasa Update : சின்னத்திரையில் ராஜா ராணி சீசன் 1 சீரியலில் இணைந்து நடித்த சஞ்சீவ் – ஆல்யா ஜோடி நிஜ வாழ்க்கையிலும் இணைந்தது அனைவரும் அறிந்த ஒன்று. இருவரும் காதலித்து கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது ஆல்யா ராஜா ராணி சீரியல் சீசன் 2-ல் நடித்து வரும் நிலையில், சஞ்சீவ் சன்டிவியின் கயல் சீரியலில் நடித்து வருகிறார்.
சின்னத்திரை வட்டாரத்தில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வரும் இவர்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் தங்களின் புகைப்படங்கள் வீடியோக்கள் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது சஞ்சீவ் -ஆலியா ஜோடி புதிதாக கார் ஒன்றை வாங்கி அதன் முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஆல்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
அபூர்வா என்ற மலையாளப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான சஞ்சீவ், தமிழில் குளிர் 100 டிகிரி, சகாக்கள், 13-ம் நம்பர் வீடு உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது சீரியலில் நடித்து வரும் சஞ்சீவ் தனது மனைவி ஆலியா கர்ப்பமாக இருந்தபோது அவருக்காக ஒரு பென்ஸ் காரை புதிதாக வாங்கினார். அதனைத் தொடர்ந்து அவரது பிறந்தநாளுக்கு ஒரு விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கி பரிசாக கொடுத்தார்.
இந்நிலையில் தற்போது 3-வது முறையாக புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த காரின் ஆரம்ப விலை 25 லட்சம் ரூபாய் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், எங்க குடும்பத்திற்கு நியூ பிஸ்டை வரவேற்கிறோம்.. பாப்புவின் கார் சேகரிப்பில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆல்யா இந்த காருக்கு முன்பு நின்று குடும்பத்துடன் எடுத்துக்கொண் புகைப்படத்தை ஆலியா அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.