தமிழ் சீரியல் ஜோடி சின்ன வயது படங்கள் வைரல்: யாருன்னு தெரியுதா?

Tamil Serial Update : தமிழ் சின்னத்திரையில், சமீபத்தில் ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடியாக மாறிய நட்சத்தி தம்பதி சித்து – ஸ்ரேயா.

Serial Actor Sidhu And Shreya Childhood Photos : தமிழில் தற்போது வெள்ளத்திரையை விட சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கே அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும் சீரியல் நடிகர் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்ககையை தெரிந்துகொள்ள ரசிகர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக அவர்களின் சமூகவலைதள பக்கங்களுக்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு அளித்து வருகினறனர். இதில் அவர்கள் பதிவிடும் ஒவ்வொரு புகைப்படமும் வைரலாகி வருவது வழக்கம்.

அதிலும் சமீப காலமாக சிரியலில் ஜோடியாக நடித்த நடிகர்கள் நடிகைகள் தங்கள வாழ்கையிலும் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடியாக மாறிய நட்சத்தி தம்பதி சித்து – ஸ்ரேயா. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் திருமணம் என்னும் சீரியலில் இணைந்து நடித்த இவர்கள், தற்போது நிஜ வாழ்விலும் திருமணம் செய்துகொண்டனர். சமீபத்தில் இவர்கள் திருமணம் குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவியது.

இதனைத் தொடர்ந்து, திருமணம் சீரியலில் இவர்கள் இருவரும் திருமண கோலத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் ரியல் ஃலைப்பில் இவர்களின் திருமணம் என இரு புகைப்படங்களையும் சித்து தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படங்கள் வைரலாக இணையத்தில் பரவிய நிலையில், தற்போது இவர்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திருமணம் சீரியலில் நடித்து பெரும் பிரபமான இவர்கள் இருவரும் தற்போது ரியல் ஃலைபில் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது இவர்களின் சிறு வயது புகைப்படத்திற்கு ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். சித்து தற்போது விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் ஆல்யா மானசாவுடன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial couple sidhu and shreya childhood photos viral

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express