இது சின்னத்திரையின் கல்யாண சீசன்: இதோ சீரியல் ஜோடிகளின் அழகான கல்யாண போட்டோஸ்!

இப்போது உண்மையாகவே சின்னத்திரையில் கல்யாண சீசன் போல. ரேஷ்மா முரளிதரன் – மதன் பாண்டியன், பார்வதி ஷபானா- ஆர்யன், சித்து – ஸ்ரேயா ஆகியோர் சமீபத்தில் திருமணம் செய்தனர்.

சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில், கல்யாண சீசன் ப்ரொமோ வைரலாகியது. அதில் அனைத்து சீரியல்களின் ஜோடிகளும் வரிசையாக திருமணம் செய்தனர். அதேபோல் இப்போது உண்மையாகவே சின்னத்திரையில் கல்யாண சீசன் போல!

ரேஷ்மா முரளிதரன் – மதன் பாண்டியன், பார்வதி ஷபானா- ஆர்யன், சித்து –  ஸ்ரேயா ஆகியோர் சமீபத்தில் திருமணம் செய்தனர். இவர்களின் வரிசையில் சத்யா சீரியலில் நடிக்கும் ஆயிஷா-விஷ்னு விஜயும், நட்சத்திரா மற்றும்  சரண்யா துரடியும் விரைவில் திருமணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருமணம் செய்து கொண்ட சீரியல் ஜோடிகள் அழகான புகைப்படங்கள் இதோ!

ரேஷ்மா முரளிதரன் மதன் பாண்டியன்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் ரேஷ்மா. பூவே பூச்சூட வா சீரியலில் சக்தி எனும் கதாபத்திரத்தில் நடித்தார். அதில் அவரின் அக்கா மீனாட்சியின் கணவராக நடித்தவர் தான் மதன். சீரியலில் நடிக்கும்போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. தற்போது அபி டெய்லர் சீரியலில் இருவரும் நாயகன், நாயகியாக நடித்து வருகின்றனர். இவர்களது திருமணம் கடந்த நவம்பர் 15ஆம் தேதி சென்னையில் வைத்து நடைபெற்றது. இந்த விழாவில், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

ஷபானா- ஆர்யன்!

செம்பருத்தி சீரியலில் பார்வதியாக நடித்து, ரசிகர்களை கவர்ந்தவர் ஷபானா. ஷபானாவும், பாக்கியலெட்சுமி சீரியலில் செழியனாக நடிக்கும் ஆர்யனும் காதலிப்பதாக தகவல் பரவியது. இருவரும் சமூகவலைதளங்களில் தங்கள் புகைப்படங்களை பகிர்ந்து காதலை உறுதிப்படுத்தினர். இவர்களது திருமணம் எந்த முன்னறிவுப்பும் இல்லாமல், கடந்த நவம்பர் 12 ஆம் தேதி எளிதாக நடந்தது.

சித்து –  ஸ்ரேயா

திருமணம் சீரியலில் சித்துவும், ஸ்ரேயாவும் கணவன் – மனைவியாக நடித்தனர். இந்நிலையில், நிஜ வாழ்க்கையிலும் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது திருமணம் சமீபத்தில் முடிந்தது. சித்து திருமணம் சீரியலில், எடுத்த புகப்படத்தையும், அவர்களின் உண்மையான படத்தையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். அன்புடன் குஷி, அரமனே, நந்தினி மற்றும் பியாதே ஹட்கிர் ஹல்லி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தனது நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் ஸ்ரேயா. இதேபோல, ராஜா ராணி 2 சீரியலில், சித்து சரவணன் என்ற முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

சரண்யா துரடி சுந்தர்ராஜ் – ராகுல் சுதர்ஷன்

நடிகை சரண்யா துராடி, நண்பரும், தொழிலதிபருமான ராகுல் சுதர்ஷனை காதலித்து வந்தார். பிப்ரவரி 2020 இல் சரண்யா, தனது அழகான காதலர் ராகுலை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். ஷரண்யாவும் ராகுலும் நீருக்கடியில் ஸ்பெஷ போட்டோஷூட்டில் தங்கள் காதலை வெளிப்படுத்தினர்.

நக்ஷத்ரா நாகேஷ்- ராகவ்

நடிகை நக்ஷத்ரா நாகேஷ் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தனது காதலன் ராகவை இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்தினார். இவர் நக்ஷத்ராவின் பள்ளி சீனியர். பல வருடங்களாக இருவரும் காதலித்து வந்த  நிலையில், இவர்களது நிச்சயதார்த்தம் ஜனவரி 25 அன்று நடந்தது. தனது உறவை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததிலிருந்து, நக்ஷத்ராவும் ராகவும் அடிக்கடி சமூக ஊடகங்களில் ஸ்பெஷல் போட்டோஷூட்களைப் பகிர்ந்துவருகின்றனர்.

சத்யா சீரியலில், ஆயிஷா மற்றும் விஷ்ணு விஜய் ஆகியோர், சத்யா மற்றும் பிரபு சண்முக சுந்தரமாக நடித்து ரசிகர்களை மகிழ்வித்தனர். இவர்களும் சமீபகாலமாக பேட்டியில் தங்களின் காதல் கதை பற்றி கூறி வருகின்றனர்! அதனால் இந்த தொகுப்பில் விரைவில் இவர்களது படமும் இடமபெறும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial couple wedding photos collection

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com