விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக கண்ணே கலைமானே சீரியலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாயகன் நந்தா மாஸ்டர் நீக்கப்பட்ட நிலையில், தற்போது தொடரை இயக்கி வந்த இயக்குனர் ராஜா தனுஷ் நீக்கப்பட்டுள்ளார்.
விஜய் டிவியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட சீரியல் கண்ணே கலைமானே. பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்று வந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த சீரியலில் ஹீரோவாக நடித்து வந்த நந்தா திடீரென சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
காயம் காரணமாக அவர் தொடரில் இருந்து வெளியேறியதாக கூறினாலும் தற்போது அவர், ஜீ தமிழின் நள தமயந்தி என்ற தொடரில் நடித்து வருகிறார். இதனிடையே தற்போது இந்த சீரியலை இயக்கி வந்த இயக்குனர் ராஜா தனுஷூம் சீரியலில் இருந்து விலகியுள்ளார். ஹீரோ விலகிய சில வாரங்களிலேயே சீரியலின் இயக்குனரும் விலகியது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே தற்போது கேமராமேனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இயக்குனர் ராஜா தனுஷ் சீரியலில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து விகடன் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த சீரியலை ரொம்ப நாட்களாக இயக்கி வந்தவர் ராஜா தனுஷ். நடிகர் நடிகைகள், டெக்னீஷியன்கள் என அனைவருமே நட்போடு நடந்துகொள்ள மாட்டார். இது தான் பிரச்சனை. இதனால் தான் நந்தாவும் தொடரில் இருந்து விலகினார் என்றும் சொல்கிறார்கள்.
விபத்தில் சிக்கிய நந்தா சில நாட்கள் ஓய்வு கேட்டதாவும். அதற்கு இவர் அனுமதி தராததால் அவர் தொடரில் இருந்தே விலகிவிட்டதாவும் கூறப்படுகிறது. இப்போது இந்த தொடருக்கான கேமராமேனுக்கும் இவருக்கும் ஏதோ பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக கேமராமேனை தொடரில் இருந்து நீக்கிவிட்டதாக இவரே கூறியள்ளார். சேனல் மற்றும் சீரியல் தயாரிப்பு நிறுவனத்திற்கு சொல்லாமல் இவர் தன்னிச்சையாக முடிவு செய்துவிட்டதாக சொல்கிறார்கள்.
இந்த விஷயத்தை கேமராமேன் அசோஷியேஷனுக்கு கொண்டு சென்றுள்ளார். இதில் கேமராமேன் அசோஷியேன் செக்ரட்டரியாக இருக்கும் நடிகர் இளவரசு, இந்த பிரச்னையில் கேமராபேன் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நல்ல தீர்வு கிடைக்காவிட்டால் ஷூட்டிங்கை மொத்தமாக நிறுத்துவோம் என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து சீரியல் தயாரிப்பு நிறுவனம் சேனல் நிர்வாகத்திடம் பேசியதை தொடர்ந்து இயக்குனர் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“