scorecardresearch

மீண்டும் அபியாக தேவயானி? கோலங்கள் 2 அப்டேட் கொடுத்த இயக்குனர்

2003-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை ஒளிபரப்பான இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது

மீண்டும் அபியாக தேவயானி? கோலங்கள் 2 அப்டேட் கொடுத்த இயக்குனர்

சின்னத்திரையில் முக்கிய சீரியலாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த கோலங்கள் தொடரின் 2-ம் பாகம் குறித்து இயக்குனர் திருச்செல்வம் அப்டேட் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் 90-களில் வெளியான பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்த தேவயானிக்கு சின்னத்திரையில் பெரிய வெற்றியை கொடுத்த சீரியல் கோலங்கள். திருச்செல்வம் இயக்கிய இந்த தொடர்ஒரு பெண் தனது வாழ்க்கையில் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது.

2003-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை ஒளிபரப்பான இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிரந்த நிலையில் 90-ஸ் குழந்தைகளில் பேவரட் சீரியலாக இன்றளவும் இருந்து வருகிறது. சன்டிவி சீரியல் வரலாற்றில் ஆல்டைம் ஹிட் தொடர் பட்டியலில் கோலங்கள் முன்னணியில் இருந்து வருகிறது.  

தற்போது கோலங்கள் சீரியல் கலர்ஸ் தமிழில் ரீ-டெலிகாஸ்ட் ஆகி வருகிறது. மேலும் கோலங்கள் தொடர் முடிந்தவுடன் அதன் 2-ம் பாகம் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், அதனபிறகு இது தொடர்பான எந்த தகவலும் இல்லை. அதேபோல் இந்த சீரியலின் இயக்குனர் திருச்செல்வம் தற்போது சன்டிவியின் எதிர்நீச்சல் சீரியலை இயக்கி வருகிறார்.

இந்நிலையில், கோலங்கள் தொடரில் தேவயானியின் அம்மா கேரக்டரில் நடித்த நடிகை சத்தியபிரியாவின் 70-வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற இயக்குனர் திருச்செல்வத்திடம், கோலங்கள் சீரியலின் 2-ம் பாகம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர் கூறுகையில்,

பெரிய நம்பிக்கையுடன் மடிவடைந்த சீரியல் கோலங்கள். அதன் 2-ம் பாகம் கண்டிப்பாக வரும். ஆனால் தயாரிப்பு நிறுவனம் வேறு என்பதால் கொஞ்சம் தாமதமாகிறது. ஆனாலும் கண்டிப்பான கோலங்கள் 2 சன்டிவியில் தான் வரும் என்று கூறியுள்ளார். இந்த பதில் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial director thiruselvam devayani kolangal 2 update in tamil

Best of Express