scorecardresearch

டி.வி சீரியலில் ஃபர்ஸ்ட் நைட் சீன்: இந்தி சீரியல்கள் ட்ரெண்ட் இங்கே வருகிறதா?

பார்த்தி மீது இருக்கும் கோபத்தில் ஜே.கே. தன் மீது வைத்துள்ள அன்பை புரிந்துகொண்டுள்ள ரம்யா அவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

Eramana
ஈரமான ரோஜாவே சீரியல்

இல்லத்தரசிகள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் சீரியல்களில் லிப்லாக் மற்றும் படுக்கை அறை காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனங்களை கொடுத்து வரும் நிலையில், வட இந்திய கலாச்சாரம் தமிழகத்தில் வருகிறதா என்ற கேள்வி எழுகிறது.

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று ஈரமான ரோஜாவே 2. இந்த சீரியலின் முதல் சீசன் முடிவடைந்துள்ள நிலையில், 2-வது சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. இதில் பார்த்தி மீது இருக்கும் கோபத்தில் ஜே.கே. தன் மீது வைத்துள்ள அன்பை புரிந்துகொண்டுள்ள ரம்யா அவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

ரம்யா ஜே.கே. திருமணத்திற்கு அவரது அம்மா தேவி எதிர்ப்பு தெரிவித்தாலும் ரம்யா அவரை சமாதானப்படுத்திவிட்டார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், 300 எபிசோடுகளுக்கு மேல் கடந்துள்ள ஈரமான ரோஜாவே சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.

இந்த சீரியலில் சமீபத்தில் ஜே.கே. ரம்யா தம்பதிக்கான முதலிரவு காட்சிகள் ஒளிபரப்பானது. இதில் திரைப்படங்களுக்கு இணையாக இருவரும் ரொமான்ஸ் செய்வது லிப்லாக் படுக்கை அறை உள்ளிட்ட பல முகம் சுழிக்க வைக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கும் இந்த சீரியலில் இந்த மாதிரியான காட்சிக்கு நெட்டிசன்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சேனல்களுக்கு இடையே ஏற்படும் டிஆர்பி போட்டிக்காக எந்த லெவலுக்கும் இறங்கி அடிப்போம் என்பது போல் அமைந்துள்ள இந்த காட்சிக்கு நெட்டிசன்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில், வட இந்திய சீரியல்கள் கலாச்சாரம் இங்கேயும் வந்துவிட்டதா என்பதை போல் பலரும் யோசித்து வருகின்றனர்.

சன்டிவியில் சீரியல்கள் ஒளிபரப்பு முன்னணியில் இருந்த காலக்கட்டத்தில் புதிதாக சீரியலை ஒளிபரப்ப தொடங்கிய பல சேனல்கள் இந்தி டப்பிங் சீரியலை ஒளிபரப்பி வந்தனர். இதற்கு ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பு கிடைத்து வந்தது. இப்போதும் இந்தி டப்பிங் சீரியலுக்கு வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இதனை முந்திச்செல்ல நேரடி தமிழ் சீரியல்கள் இந்த மாதிரியான காட்சிகளை கையில் எடுத்துள்ளதாக என்ற கேள்வி எழுகிறது. இதற்கு ரசிகர்கள் ஒருபுறம் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஒருபுறம் ரொமான்ஸ் சூப்பர் என்று இதய எமொஜிகளை பதிவிட்டு பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial eramana rojave 2 troll update in tamil