Advertisment

சீரியல் முடிய போகுதா? இல்ல இவர் வெளியே போறாரா? ஈரமான ரோஜாவே சீரியல் நடிகை வைரல் பதிவு

தொடக்கத்தில் பல சர்ச்சைகளை சந்தித்தாலும் போக போக ரசிகர்கள் மனதில் ஒரு வித ஈர்ப்பை ஏற்படுத்திய இந்த சீரியலில் ஜீவா – பிரியா ஜோடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

author-image
WebDesk
New Update
Eramana Rojave

ஈரமான ரோஜாவே சீரியல் நடிகைகள்

விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்து வரும் நடிகை சுவாதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாக பரவி வரும் நிலையில், விரைவில் சீரியல் முடிவுக்கு வர உள்ளதா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Advertisment

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று ஈரமான ரோஜாவே. முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து ஒளிபரப்பான 2-வது சீசன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சகோதர்களை காதலித்து வரும் சகோதரிகளில், அண்ணன் காதலித்த பெண்ணை தம்பிக்கும், தம்பி காதலித்த பெண்ணை அண்ணனுக்கும் திருமணம் செய்து வைத்துவிடுகின்றனர். இதன் பிறகு இவர்கள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் தான் இந்த சீரியலின் கதை.

தொடக்கத்தில் பல சர்ச்சைகளை சந்தித்தாலும் போக போக ரசிகர்கள் மனதில் ஒரு வித ஈர்ப்பை ஏற்படுத்திய இந்த சீரியலில் ஜீவா – பிரியா ஜோடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் சகோதரிகளாக கேப்ரியல்ல மற்றும் சுவாதி ஆகியோர் நடித்து வருகின்றனர். கணவன் மனைவிக்கு இடையே சண்டை பிறகு ரொமான்ஸ் என ஈரமான ரோஜாவே சீரியல் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், தற்போது நடிகை சுவாதி வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சீரியலில் பிரியாவாக நடித்து வரும் நடிகை சுவாதி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அழுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு, சம்திங் என்ட் சூன் (Something end soon) என்று பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இந்த சீரியல் முடிய போகுதா அல்லது சுவாதி சீரியலில் இருந்து விலக போகிறாரா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. சீரியல் திருமணத்தில் தான் குழப்பம் என்றால், இன்ஸ்டா பதிவிலும் குழப்பமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial News Eeramana Rojave
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment