தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்களுக்கு இடையே வரும் டி.ஆர்.பி மோதல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், சன் டிவி சீரியல்களே டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வருகிறது.
அதே சமயம், விஜய் டிவி சீரியலில் நடித்து வரும் நட்சத்திரங்கள், சன்டிவி சீரியலுக்கு மாறுவதும், சன்டிவி சீரியிலில் நடித்து வருபவர்கள் விஜய் டிவி சீரியலுக்கு மாறுவதும் அவ்வப்போது நடந்நது வருகிறது. அந்த வகையில் தற்போது சன்டிவியின் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து முக்கிய 3 கேரக்டர்கள் விஜய் டிவியின் 3 சீரியல்களில் நடிக்க கமிட்டி ஆகியுள்ளனர்.
மதுமிதா
/indian-express-tamil/media/media_files/2025/01/01/LAkVWfoLkODGGU9dtCez.jpg)
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கேரக்டரில் நடித்து வந்தவர் மதுமிதா. முதல் சீசனில், சிறப்பாக நடித்து அசத்திய இவர், தற்போது ஒளிபரப்பாகி வரும் 2-வது சீசனில் நடிக்கமாட்டார் என்று சீரியல் தொடங்கும் முன்னே தகவல் வெளியானது. அதன்படி தற்போது எதிர்நீச்சல் சீரியலில் வி.ஜே.பார்வதி ஜனனி கேரக்டரில் நடித்து வரும் நிலையில், நடிகை மதுமிதா, விஜய் டிவியின் அய்யனார் துணை என்ற சீரியலில் முதன்மை கேரக்டரில் நடிக்க தொடங்கியுள்ளார். இந்த சீரியலின் ப்ரமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சத்யா தேவராஜன்
/indian-express-tamil/media/media_files/WSLqhNLHz1RUv8hNto2g.jpg)
எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை கேரக்டரில் நடித்து வந்தவர் சத்யா தேவராஜன். தற்போது அந்த சீரியலின் 2-ம் பாகத்திலும் அதே கேரக்டரில் நடித்து வரும் நிலையில், தற்போது இவர், விஜய் டிவியின் புதிய சீரியலான தனம் என்ற சீரியலில் நாயகியாக மாறியுள்ளார். இந்த சீரியல் விரைவில் ஒளிபரப்பாக உள்ள நிலையில், சத்யா எதிர்நீச்சல் சீரியலில் தொடர்ந்து நடிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
காயத்ரி கிருஷ்ணன்
/tamil-ie/media/media_files/uploads/2023/05/Gayathri-Krishnan.jpg)
எதிர்நீச்சல் சீரியலில், ஜான்சி ராணி என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை காயத்ரி. கரிகாலனின் அம்மா கேரக்டரில் நடித்து வந்த இவர், தற்போது 2-வது சீசனில், இதுவரை நடிக்காத நிலையில், விஜய் டிவியின் புதிய சீரியலான சிந்து பைரவி சீரியலில், சிவா கேரக்டலுக்கு அம்மாவாக காயத்ரி நடிக்க தொடங்கியுள்ளார். சன்டிவியின் ஒரு சீரியலில் இருந்து 3 நடிகைகள் விஜய் டிவியின் 3 புதிய சீரியல்களில் கமிட் ஆகியுள்ளது, டி.ஆர்.பி ரேட்டிங்கில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.