New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Ethirneechal-aadhiri.jpg)
tamil Serial Actress
கடந்த சில மாதங்களாக ஆதிரை தனது காதலனை அருணை திருமணம் செய்துகொள்வாரா? அல்லது அண்ணன் பார்த்த மாப்பிள்ளை கரிகாலனை திருமணம் செய்துகொள்வாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது
tamil Serial Actress
எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை கேரக்டரில் நடித்து வரும் நடிகை சத்யா தேவராஜன் தற்போது வெளியிட்டுள்ள சோகமான ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
சன்டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். இதுவரை ஒளிபரப்பான சீரியலிகளிலேயே அதிக டிஆர்பி ரேட்டிங் பெற்ற சீரியல் என்ற பெருமையுடன் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் நாளுக்கு நாள் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. ஆதி குணசேகரன் என்ற ஆணாதிக்கம் படைத்த ஒருவரிடம் இருந்து அவரது குடும்பத்து பெண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகள் தான் கதை.
கோலங்கள் சீரியல் மூலம் புகழ்பெற்ற இயக்குனர் திருச்செல்வம் இந்த சீரியலை இயக்கி வருவதோடு மட்டுமல்லாமல், ஜீவானந்தம் என்ற முக்கிய கேரக்டரிலும் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக டிஆர்பி ரேட்டிங்கில் 2-3 இடங்களை பெற்று வந்த எதிர்நீச்சல் தற்போது அதிகமான டிஆர்பி புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஆதிரையின் திருமணம்.
கடந்த சில மாதங்களாக ஆதிரை தனது காதலனை அருணை திருமணம் செய்துகொள்வாரா? அல்லது அண்ணன் பார்த்த மாப்பிள்ளை கரிகாலனை திருமணம் செய்துகொள்வாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வந்த நிலையில், கடந்த வாரம் அண்ணன்கள் முன்னிலையில் நடு வீதியில் ஆதிரையின் திருமணம் வலுக்கட்டாயமாக நடந்தது. இதில் கரிகாலன் ஆதிரையின் கழுத்தில் தாலி கட்டிவிட்டார். இதனால் அடுத்து ஆதிரையின் முடிவு என்ன என்பதுகுறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதனிடையே ஆதிரை கேரக்டரில் நடித்து வரும் நடிகை சத்யா தேவராஜன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. சீரியல் மேக்கப்புடன் கடுத்தில் மஞ்சள் தாலியுடன் கழுகு படத்தில் வரும் கிட்ட வந்து நீயும் பேச என்ற பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதில ஒரு ரசிகர், அந்த தாலியை பாக்கும்போதெல்லாம் மனசு ரொம்ப வலிக்குது என்று சொல்ல, அதற்கு சத்யா ஆதிரையில் இமோஜியை அனுப்பி ஃபீலிங்கை ஷேர் செய்துள்ளார். மற்றொருவர் நீங்க ஃபீல் பண்ணாதீங்க கோர்ட்டுக்கு போய் சீக்கரிமைாக கரிகாலனை டைவர்ஸ் பண்ணிடுங்க என்று கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.