Advertisment

அதோ அந்த பறவை போல... துபாயில் கொண்டாட்டம் : எதிர்நீச்சல் நடிகையின் ரீசன்ட் க்ளிக்ஸ்

எதிர்நீச்சல் சீரியல் நடிகை வெளியிட்டுள்ள துபாய் க்ளிக்ஸ் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Hari priya Isai

ஹரிப்பிரியா இசை

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சன் டி.வியின் எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நடிகை ஹரிப்பிரியா இசை தற்போது வெக்கேஷனுக்கு துபாய் சென்றுள்ள நிலையில், அங்கிருந்து அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

சின்னத்திரையில், ஒரு தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஹரிப்பிரியா இசை,  பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு இ.எம்.ஐ ("EMI தவணை முறை வாழ்கை) என்ற தொடரின் மூலம் சின்னத்திரை சீரியல்களில் அறிமுகமானார். அதன்பிறகு "பிரியமானவள்", "லட்சுமி வந்தாச்சு", "சரவணன் மீனாட்சி", "கல்யாணம் முதல் காதல் வரை", "விதி" ஆகிய சீரியல்களில் நடித்திருந்தார்.

தற்போது சன் டி.வியின் எதிர்நீச்சல் சீரியலில், முக்கிய கேரக்டரில் நடித்து வரும் ஹரிப்பிரியா இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வருகிறார். சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர், அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது விடுமுறை தினத்தை முன்னிட்டு துபாய் சென்றுள்ள ஹரிப்பிரியா அங்கிருந்து வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்களில் கடற்கரையோர இடத்தின் இயற்கை அழகைக் காண்பிப்பது மட்டுமல்லாமல், ஹரிப்ரியாவின் வாழ்க்கையின் முக்கியமான ஆர்வத்தையும் எடுத்துக்காட்டுகின்றன. இந்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்களும் அவரது ஃபாலோயர்களும் குளிர்ச்சியான குளிர்கால விடுமுறைக்கு பாராட்டு மற்றும் எமோஜி வார்த்தைகளால் கருத்துக்களை பவிர்ந்து வருகிறது.

ஹரிப்ரியா தனது துபாய் விடுமுறையின் மகிழ்ச்சியைத் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், அவரிடம் இருந்து மேலும் சில புகைப்படங்கள் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Haripriya Isai ethirneechal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment