தமிழ் சீரியலில் நம்பிக்கை பெண்... ஆந்திராவில் லிப் லாக்... எதிர்நீச்சல் ஜனனி வீடியோவுக்கு ஆதரவும் எதிர்ப்பும்!

தமிழில் ஹோம்லியாக நடிக்கும் நடிகை என்று பெயரெடுத்த மதுமிதா தெலுங்கு சீரியலில் முத்தகாட்சியில் நடித்திருந்த வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழில் ஹோம்லியாக நடிக்கும் நடிகை என்று பெயரெடுத்த மதுமிதா தெலுங்கு சீரியலில் முத்தகாட்சியில் நடித்திருந்த வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ethir Neechal Janani

எதிர்நீச்சல் ஜனனி

எதிர்நீச்சல் சீரியலில் ஜன்னி கேரக்டரில் நடித்து வரும் நடிகை மதுமிதா தெலுங்கு சீரியல் ஒன்றில் லிப்லாக் காட்சியில் நடித்த வீடியோ பதிவு என்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

சன்டிவியின் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி ரேட்டிங்கிலும் இந்த சீரியல் அதிக புள்ளிகளை பெற்று முன்னணியில் இருந்து வருகிறார். ஆணதிக்கம் கொண்ட ஒருவரிடம் மாட்டிக்கொண்டு தவிக்கும் குடும்பத்து மருமகள்களின் கதையை வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து வரும் நடிகர் மாரிமுத்து மக்கள் மத்தியில் பெரும் பிரபலம்.

Advertisment
Advertisements

அதேபோல் ஜன்னி கேரக்டரில் நடித்து வரும் மதுமிதாவும் வரவேற்பை பெற்று வருகிறார். தமிழில் ஹோம்லியாக நடிக்கும் நடிகை என்று பெயரெடுத்த மதுமிதா தெலுங்கு சீரியலில் முத்தகாட்சியில் நடித்திருந்த வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் எதிர்நீச்சல் ஜனனியா இது என்று பல கேள்விகளையும் விமர்சனங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

எதிர்நீச்சல் சீரியலில் ஹோம்லி பெண்ணாக நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்த மதுமிதா தெலுங்கில் நம்பர் ஒன் கோபாலு என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடரில் வந்த முத்த காட்சி தான் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அவர் நடிக்கை என்பதால் பல கேரக்டர்களில் நடிக்க வேண்டும். அதனால் இந்த முத்த காட்சி அவரின் நடிப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு என்று ஒரு சிலர் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மறுபுறம் எதிர்நீச்சல் சீரியலில் இவரை பார்த்து பழகிய சிலர் இவரா இப்படி செய்தார் என்று கேட்டு வருகின்றனர். தமிழில் ஹோம்லி தெலுங்கில் லிப்லாக் என்று கருத்து தற்போது வேகமாக பரவி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: