New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Madhumitha-H.jpg)
எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதா
சன்டிவியில் 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்ட எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி என்ற முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் மதுமிதா.
எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதா
சன்டிவியின் எதிர்நீச்சல் ஜனனி சக்திவேல் என்ற முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகை மதுமிதா சமீபத்தில் வெளியிட்டுள்ள ஸ்டைலிஷ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் எதிர்நீச்சல் சீரியல் அதிகமான டிஆர்பி ரேட்டிங் பெற்று பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சீரியல் ஆணாதிக்கம் படைத்த ஒரு குடும்ப தலைவனை அந்த வீட்டுக்கு வரும் மருமகள்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்ற அடிப்படையில் வித்தியாசமான முறையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சீரியலில் ஜனனி சக்திவேல் என்ற கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை மதுமிதா.எச். கர்நாடகாவில் பிறந்த இவர் கடந்த 2017-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ஷானி என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து புட்டமல்லி, ஜெய் ஹனுமான் உள்ளிட்ட சீரியல்களில் நடித்த மதுமிதா, ஜீ தமிழின் பிரியாத வரம் வேண்டும் என்ற சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த சீரியலில் இவர் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.
பிரியாத வரம் வேண்டும் சீரியல் 2020-ம் ஆண்டு முடிவடைந்த நிலையில், நம்பர் ஒன் காடலு என்ற தெலுங்கு சீரியலில் நடித்து வந்தார். இந்த சீரியல் 2022-ம் ஆண்டு நிறைவடைந்தது.
அதன்பிறகு சன்டிவியில் 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்ட எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி என்ற முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். ஆதி குணசேகரனை எதிர்த்து பல ப்ளான்களை போடும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் மதுமிதா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஸ்டைலிஷ் புகைப்படங்கள் இணைதய்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.