வில்லியாக மாறிய எதிர்நீச்சல் நடிகை: சன் டி.வி-க்கு தாவிய பாண்டியன் ஸ்டோர்ஸ் அம்மா நடிகை
எதிர்நீச்சல் சீரியல்ல முக்கிய கேரக்டரான ஜனனியின் பெஸ்ட் ப்ரண்டாக நடித்து வருபவர் நடிகை வைஷ்ணவி நாயக். இவர் தற்போது சன்டிவியின் புதிய சீரியலில் ஒப்பந்தமாகியுள்ளார்.
எதிர்நீச்சல் சீரியல்ல முக்கிய கேரக்டரான ஜனனியின் பெஸ்ட் ப்ரண்டாக நடித்து வருபவர் நடிகை வைஷ்ணவி நாயக். இவர் தற்போது சன்டிவியின் புதிய சீரியலில் ஒப்பந்தமாகியுள்ளார்.
சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் புதிய சீரியலில் எதிர்நீச்சல் நடிகை வில்லியாகும், விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை முக்கிய கேரக்டரிலும் நடித்து வருகிறார்.
Advertisment
தமிழ் சின்னத்திரையில், தற்போது அதிகம் பேசப்பட்டு வரும் சீரியல் எதிர்நீச்சல், கோலங்கள் புகழ் திருச்செல்வம் இயக்கிய வரும் இந்த சீரியலில், மாரிமுத்து, மதுமிதா, பிரியதர்ஷினி உள்ளிட்ட பல முக்கிய கேரக்டர்களுடன் திருச்செல்வம் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். சமீபத்தில் டிஆர்பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகளை பெற்ற சீரியல் என்ற பெருமை பெற்ற எதிர்நீச்சல் இனி வாரத்தில் 7 நாட்களும் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சன் டிவியின் புது சீரியல்
இந்நிலையில், எதிர்நீச்சல் சீரியல்ல முக்கிய கேரக்டரான ஜனனியின் பெஸ்ட் ப்ரண்டாக நடித்து வருபவர் நடிகை வைஷ்ணவி நாயக். இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தற்போது சன்டிவியின் புதிய சீரியலில் ஒப்பந்தமாகியுள்ளார். கடந்த ஜூன் 26-ந் தேதி முதல் சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் புது வசந்ததம் சீரியலில் முக்கிய வில்லியாக வைஷ்ணவி நடித்து வர அவருக்கு துணையாக பாண்யடின் ஸ்டோர்ஸ் நடிகை சாந்தி வில்லியம்ஸ் நடித்து வருகிறார்.
Advertisment
Advertisements
விஜய் டிவியில் இருந்த சாந்தி வில்லியம்ஸ் சன்டிவிக்கு மாறியுள்ள நிலையில், சன்டிவியில் இருந்து வைஷ்ணவி விஜய் டிவிக்கும் மாறியுள்ளார். எஸ்.ஏ.சந்திரசேகர் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் கிழக்கு வாசல் சீரியல் விரைவில் ஒளிபரப்பாக உள்ள நிலையில், இந்த சீரியலில் வைஷ்ணவி முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil