சன்டிவியின் எதிர்நீச்சல் 2 சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் நடிகை புதிதாக என்ட்ரி கொடுத்துள்ளார்.
சன்டிவியின் சீரியல்களுக்கு தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியல் சிறப்பாக எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பாகி வந்த நிலையில், இந்த சீரியலில் வில்லன் கேரக்டரில் வேல ராமமூர்த்தி நடித்ததால் வந்த விமர்சனங்கள் மற்றும், டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் எதிர்நீச்சல் வீழ்ச்சியை சந்தித்தது. இதன் காரணமாக கடந்த ஜூன் 8-ந் தேதி எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வந்தது.
இதனிடையே சமீபத்தில் வெளியான எதிர்நீச்சல் சீரியலின் 2-ம் எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற பெயரில் ஒளிபரப்பாகும் என்ற அறிவிப்புடன் வெளியானது. இது குறித்து வெளியான டீசரில், கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா இசை ஆகியோர் வரும் நிலையில், மதுமிதாவுக்கு பதிலாக நடிகை பார்வதி ஜனனி கேரக்டரில் நடித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 23-ந் தேதி முதல் எதிர்நீச்சல் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
முதல் சீசனை போலவே 2-வது சீசனும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், முதல் சீசனில் வில்லன் ஆதி குணசேகரன் சிறையில் உள்ளதால், அவரது இடத்தில் இப்போது கதிர் இருந்து வீட்டிற்குள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், சீரியலில் தற்போது புதிதாக ஒரு நடிகை என்ட்ரி கொடுத்துள்ளார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இதுவரை 30-க்கு மேற்பட்ட எபிசோடுகள் கடந்துள்ள நிலையில், சீரியலில் அவ்வப்போது கேரக்டர் மாற்றம் மற்றும், புதிய கேரக்டர் என்ட்ரி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவின் மகள் மயூ கேரக்டரில் நடித்து வரும் குழந்தை நட்சத்திரம், பேபி ஷெரின் எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ளார். அவரது காட்சிகள் தொடர்பான ப்ரமோ வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.